பக்கம்:பாலைச்செல்வி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 51 ஏனையோரும் மகிழ்ந்து வாழ்வதற்கு வழி செய்து வாழும் வாழ்வே விழுமிய வாழ்வாம். அவ்வாழ்வு, வறுமையால் வாடித் தன் வாயிற்கண் வந்து இரந்து நிற்பார்க்கு வரையாது வழங்குவதால் வருவதாம். அவ்வாறு வழங்கி வாழ்வதற்கு வற்றாப் பெருஞ்செல்வம் வேண்டும். அத்தகு பெருஞ் செல்வத்தைத் தேடிப் பெற வேண்டிய நிலை இன்றாக, முன்னோர் ஈட்டி வைத்துச் சென்றிருப்பினும், அப்பொருளால் தான் பயன் துய்த்தல் புகழாகாது; அஃது அவர்க்குப் புகழும், தனக்குப் பழியுமாம். ஆகவே, தானே பொருளிட்டித் தக்கார்க்கு வழங்கித் தன்னேரில்லாப் புகழ் பெறுதல் வேண்டும்; அதுவே வாழ்வின் பயனாம், என்று எண்ணும் உயர்ந்த உள்ளம் உடையான் அவ்விளைஞன். அதனால், தான் அரிதின் முயன்று அடைந்த, தன் ஆருயிரனைய மனைவியைப் பிரிந்து பொருள் தேடிவரத் துணிந்த அவன், தன் கருத்தினைத் தன் காதலிக்கு உரைத்தானல்லன்; உரைத்துச் செல்வது இயலாது. தான் பிரிதலை அறியின், அது பொறாது, அழும் அவளை, அந்நிலையில் விட்டுச் செல்லும் துணிவு தனக்கு வாராது. ஆகவே சொல்லாது செல்வதே நன்று என எண்ணினான். அதனால், போதற்கு வேண்டும் ஏற்பாடுகளை, அவள் அறியாவாறே மேற்கொண்டான். எல்லாம் முடிந்த பின்னர், வழியில், கள்வராலும், காட்டு விலங்குகளாலும் உளவாகும் கொடுமைகளைப் போக்கவல்ல, படைத் துணை இருப்பின் நன்று என உணர்ந்தான். உடனே, தன் ன்கயால் தானே பண்ணி வைத்திருக்கும் வலிய வில்லை எடுத்து, அவ்வில் நாணின் உறுதிப்பாட்டினை உணருமாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/53&oldid=822306" இலிருந்து மீள்விக்கப்பட்டது