பக்கம்:பாலைச்செல்வி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ல் புலவர் கா. கோவிந்தன் அதைப் பலமுறை தடவிப் பார்த்துக் கொண்டான். அவ் வில்லிற்கேற்ற அம்புகளை ஆராய்ந்து எடுத்துக் கொண்டான். வில்விரர், தம் கைகளின் பாதுகாப்புக் குறித்து, அணிந்து கொள்ளும் கையுறைகளை அணிந்து கொண்டான். இறுதியாக எதிர்த்தார் உயிரை இழக்கச் செய்யும் வெற்றிச் சிறப்பு வாய்ந்த ஆழிப்படையை, அதன் மீது படிந்திருக்கும் மாசு போகத் துடைத்து எடுத்து வைத்துக் கொண்டான். தன் மனைவிக்குத், தான் பொருளிட்டும் முயற்சி மேற்கொள்வது குறித்து ஏதும் அறிவியா அவன், இடை வழியில் உண்டாம் ஏதம் போக்கும் வழித் துணையாகுக என அம்பையும், வில்லையும், ஆழிப்படையையும் எடுத்துக் கொள்வதையும் அவள் அறியாவாறே மேற் கொண்டான். ஆயினும், தன் கணவனை இமைப் பொழுதும் பிரியாது இணைந்து வாழும் அவன் மனைவி, படைக்கலங்களைப் பழுது போக்கி எடுத்து வைப்பதைப் பார்த்து விட்டாள். அவன் படை தொடுவது ஏன் என்ற ஐயம் அவள் உள்ளத்தில் அன்றே இடம் பெற்றது. அவ்வினாவைத் தொடர்ந்து சென்ற அவள் சிந்தனை, வெளிநாடு செல்லத் துணிந்துள்ளான் தன் கணவன்; இன்றோ அல்லது நாளையோ, தன்னைத் தனியே விடுத்துப் பிரிந்து போய்விடுவான் என்ற உண்மையை உணர்த்தியது. அவன் பிரிந்து போய்விடுவன்; அவன் அன்பு அருகிவிடும்; தான் தனித்திருந்து துயர் உறுதல் வேண்டும் என்ற உணர்வு அவள் உள்ளத்தில் இடம் பெற்ற அந்நிலையே, அவள் உள்ளம் பெருந்துன்பத்திற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/54&oldid=822307" இலிருந்து மீள்விக்கப்பட்டது