பக்கம்:பாலைச்செல்வி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 53 குள்ளாயிற்று. உள்ளத் துயர்க் கொடுமை அவள் உடல் நலனையும் கெடுத்தது. அவள் உடல் தளர்ந்தது; உருக்குலைந்தது; அழகு அழிந்தது; மறுவறச் செய்யப்பெற்ற முழுமதி மீது கருமேகம் படிந்தாற்போல், மாசிலாப் பேரொளி வீசும் அவள் முகம் பசலை படர்ந்து ஒளி குன்றி அழகிழந்தது; சுனையிடத்தே மலர்ந்து, மழைநீரை எதிர்நோக்கி நிற்கும் கருநீல மலர் நீர் சொரிவதுபோல், அகத்துயரைப் புறத்தே காட்டவல்ல துயர் நோக்குடைய வாகிய அவள் கருவிழிகள், இடைவிடாது நீர் சொரியத் தொடங்கிவிட்டன. காற்றால் அசைகின்ற வெண்காந்தள் மலர், காம்பற்று இதழ்களைச் சொரிவது போல், காண்பார் கண்களைப் பறிக்கும் பேரழகு வாய்ந்த அவள் கைவளைகள், அக்கைகள் தளர்ந்து போகவே, ஆங்கு நில்லாது கழன்று ஓடத் தொடங்கிவிட்டன. பொருள் தேடிப் போகத் துடித்துக்கொண்டிருக்கும் அவனையும், அவன் பிரிந்து விடுவனே! பிரிந்துவிடின் அப் பிரிவுத் துயரை யான் எவ்வாறு ஆற்றுவன்? என எண்ணித் துயர்உறும் அவளையும் கண்டாள் தோழி. அவன் பிரிவன் என எண்ணியபோதே இவள் நிலை இதுவாயின், அவன் பிரிந்து போய்விடின், இவள் அத்துயர் பொறுக்க மாட்டாது உயிரிழப்பள். ஆகவே, அவனைப் போகாவாறு தடுத்து நிறுத்துதல் வேண்டும் எனத் துணிந்தாள். - அதனால், வெளிநாடு செல்வார்க்கு வேண்டும் பொருள்களை எடுத்து வைக்கும் பணி மேற்கொண்டிருந்த அவன்பாற் சென்றாள்; சென்று, "அன்ப! புகழின்பால் கொண்ட ஆசை அதிகமாய் விட்ட காரணத்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/55&oldid=822308" இலிருந்து மீள்விக்கப்பட்டது