பக்கம்:பாலைச்செல்வி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 55 கூறி, "நீ பிரியின் இவள் உயிரும் பிரியும். மனைவியை இழந்து பெறும் பொருள் மாண்புடைத்தன்று: அது அவள் இறந்த பின்னர்ப் பயன் அளிப்பதும் இல்லை. ஆகவே பயனில் முயற்சி மேற்கொண்டு, வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளும் மக்கட்பதடி ஆகிவிடாதே!” எனக் கூறித் தடுத்து நிறுத்தினாள். அது இது: "வேனில் உழந்த வறிது உயங்கு ஒய்களிறு வான்நீங்கு வைப்பின் வழங்கத்தேர் நீர்க்கு அவாஅம் கானம் கடத்திர் எனக் கேட்பின், யான் ஒன்று உசாவுகோ ஐய சிறிது ; நீயே, செய்வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழநின் 5 கைபுனை வல்வில் ஞாண் உளர்தியே : இவட்கே, செய்வுறு மண்டிலம் மையாப்பதுபோல் மையில் வாள்முகம் பசப்பு:ஊரும்மே ; நீயே, வினைமாண், காழகம் வீங்கக் கட்டிப் புனைமாண் மரீஇய அம்பு தெரிதியே ; 10 இவட்கே, சுனைமாண் நீலம் கார் எதிர்பவைபோல் இணைநோக்கு உண்கண் நீர்நில் லாவே , நீயே புலம்பில் உள்ளமொடு பொருள்வயின் செலீஇய வலம்படு திகிரி வாய்நீ வுதியே ; இவட்கே, அலங்குஇதழ்க் கோடல் வீஉகு பவைபோல் 15 இலங்குனர் எல்வளை இறை ஊரும்மே ; எனநின், செல்நவை அரவத்தும் இணையவள் நீநீப்பின் தன்நலம் நடைகொளப் படுதலின், மற்றுஇவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/57&oldid=822310" இலிருந்து மீள்விக்கப்பட்டது