பக்கம்:பாலைச்செல்வி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இ. புலவர் கா. கோவிந்தன் இன்உயிர் தருதலும் ஆற்றுமோ, 20 முன்னிய தேஏத்து முயன்றுசெய் பொருளே?” தலைவன் பிரிவுக் குறிப்பறிந்த தோழி, அவன் பிரியின் அவன் மனைவி உயிர் வாழாள் என்பது உரைத்துச் செலவழுங்குவித்தது இது. 1. வேனில்-கோடை உழந்த-வருந்திய, வறிது உயங்குஉடல் சுருங்க வருந்தும்; ஒய்-ஊக்கம் கெட்ட, 2. வான்-மழை, வைப்பு-ஊர்கள்; வழங்காத்தேர்-பேய்த்தேர் என வழங்கும் கானல்நீர், மணல் பரந்த இடங்களில் கோடை காலத்தில் நீர்போல் தோன்றும் கானல்; அவாஅம்-அவாவும், 4. உசாவுகோகேட்கட்டுமா?, 5. அயர்ந்து-விரும்பி; யாழ-அசை, 6. உளர்தி-தடவி நோக்குகின்றனை, 7. மண்டிலம்-திங்கள்; மையாப்பது-மேகம் பரவுவது, 9. காழகம்-கையுறை; 10. தெரிதல்-ஆராய்தல்; 11. கார் எதிர்தல்-மழையை எதிர் நோக்கி நீர் சொரிதல்; 12. இணைநோக்குவருந்தும் பார்வை; 13. புலம்பு இல் உள்ளம்-பிரிகின்றோம் என எண்ணி வருந்தாத உள்ளம்: 14. திகிரி-ஆழிப்படை, நீவுதி-துடையா நின்றாய்; 15. கோடல்-வெண்காந்தள், வீ-இதழ்கள், ஏர்-அழகு; எல்-ஒளி, இறை-முன்கை; ஊரும்-ஒடும்; 18. செல்நவை அரவம்-செல்லும், துயர் தரும் ஆரவாரம்; இணையவள் -துயர்கொள்வாள்; தன்நலம் கடைகொள்ளப்படுதல்- இறத்தல்; இறக்கும் காலமே, ஒருவரின் நலம் முடியும் காலமாம். ஆதலின் இவ்வாறு கூறினார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/58&oldid=822311" இலிருந்து மீள்விக்கப்பட்டது