பக்கம்:பாலைச்செல்வி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 மாண்புடைச் செல்வம் பொருட் செல்வம் என்பதற்குப் பழந்தமிழ் மக்கள் கொண்ட பொருளே வேறு. மண்ணையும், பொன்னையும், மனையையும், நாட்டையும் குறிப்பதே பொருள் என அவர்கள் எண்ணினாரல்லர். செல்வம் என்ற இனத்தில் அவையும் சேர்ந்தனவே யாயினும், அவை மட்டுமே செல்வங்களாகா. சிந்தை நிறைந்த வாழ்வே செல்வமாம். அவ்வாழ்வு, மனையாளோடு மனையகத்தே யிருந்து, வருவிருந்து ஓம்பி வாழும் மாண்புடைய வாழ்வால் வரும். நாட்டின் வாழ்வு, நாட்டு மக்களின் அக வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. அம் மக்கள் நன்கு வாழின், நாடும் நன்கு வாழும். அவர் அகவாழ்வு துன்பம் நிறைந்ததாயின், அந்நாட்டிலும் துன்பம் தொடரும். ஆகவே, நாடாளும் அரசன் நல்லரசு மேற்கொள்வதை வேண்டின், அந் நாட்டு மக்கள் நல்வாழ்வுடையராதல் வேண்டும். அவ்வாறு தாமும் நல்வாழ்வு வாழ்ந்து, தம் நாட்டு அரசனையும் நல்லரசனாக்கும் நிலையே நிறைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/59&oldid=822312" இலிருந்து மீள்விக்கப்பட்டது