பக்கம்:பாலைச்செல்வி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இ. புலவர் கா. கோவிந்தன் செல்வமர் அவ்வாறன்றி, மன்னவன் கோலும், அதற்குக் காரணமாய மனையற வாழ்வும் மாண்பிழந்து போமாறு, மனைவியைத் துயர்க்கு உள்ளாக்கி விட்டுப் பிரிந்து போய் ஈட்டி வரும் பொன்னும், மணியும் போலும் பொருள்கள், உண்மைப் பொருட் செல்வங்களாகா, பொருட் செல்வம் குறித்துப் பழந்தமிழ் மக்கள் கொண்டிருந்த கருத்து இதுவே. இதை உணர்ந்திருந்தாள் ஒரு பெண். அவள் தான் உணர்ந்த இவ்வுண்மையினை, அஃது உணராது மயங்கிய ஓர் இளைஞனுக்கு உரைப்பாள் போல், உலகத்தார்க்கு உரைத்துள்ளாள் ஒரு கலிப்பாவில். அவள் வாழ்ந்திருந்த பழந்தமிழ் நாட்டுச் சிற்றுார் ஒன்றில், அவள் மனையை அடுத்துள்ளதொரு மனையில், இளங் காதலர் இருவர் வாழ்ந்திருந்தனர். அவர்கள், ஒன்றி வாழும் அன்றில்கள் போல், ஒருவரை யொருவர் பிரிந்தறியாப் பேரன்பு கொண்டு, வளம் பெருக வாழ்ந்திருந்தனர். அவர்தம் வாழ்க்கை நலம் கண்டு வாயார வாழ்த்தி, மனமாரப் பாராட்டிய அப் பெண், ஒரு நாள் அவ்விளைஞனின் மனைவி, கண்ணில் நீர் மல்கக் கலங்கி நிற்கக் கண்டாள். அக் காட்சி அவளைத் துணுக்குறப் பண்ணிற்று. அவள் ஆடற் பருவம் தொட்டே அவளைப் பிரியாது, அவளோடு ஆடிப்பாடி அக மகிழ்ந்தவள் அப்பெண். அவள் ஆருயிர்த் தோழியும் அவளே. அதனால் அவள்பால் உரிமையோடு சென்று, உற்றது யாது என வினவினாள். தோழியைக் காணவே, அவள் துயர் முன்னினும் மிக்கது. ஆயினும் அதை ஒருவாறு அடக்கிக் கொண்டு, "தோழி! அவர்-என் கணவர் என்னைப் பிரிந்து எங்கோ செல்ல எண்ணி யுள்ளார்போல் தோன்றுகிறது. அதை அவர் என்னிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/60&oldid=822314" இலிருந்து மீள்விக்கப்பட்டது