பக்கம்:பாலைச்செல்வி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 83 “வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய் சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழல்இன்றி, யார்கண்ணும் இகந்துசெய்து இசைகெட்டான் இறுதிபோல் வேரொடு மரம்வெம்ப, விரிகதிர் தெறுதலின், அலவுற்றுக் குடிகூவ, ஆறுஇன்றிப் பொருள் வெஃகிக், 5 கொலை அஞ்சா வினைவரால் கோல்கோடி யவன்நிழல் உலகுபோல் உலறிய உயர்மர வெஞ்சுரம்; இடைகொண்டு பொருள்வயின் இறத்திநீ எனக்கேட்பின், உடைபு நெஞ்சுஉக ஆங்கே, ஒளி ஒடற்பாள் மன்னோ? படையமை சேக்கையுள் பாயலின், அறியாய், நீ 10 புடைபெயர்வாய் ஆயினும் புலம்புகொண்டு இணைபவள்; முனிவுஇன்றி முயல்பொருட்கு இறத்திநீ எனக்கேட்பின், பணியகண் படல்ஒல்லா படர்கூர்கிற்பாள் மன்னோ? நனிகொண்ட சாயலாள், நயந்துநீ நகையாகத் துனிசெய்து நீடினும் துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்; 15 பொருள்நோக்கிப் பிரிந்துநீ போகுதி எனக் கேட்பின், மருள்நோக்கம் மடிந்து ஆங்கே மயல்கூர்கிற்பாள் மன்னோ? இருள்நோக்கம் இடைஇன்றி, ஈரத்தின் இயன்ற நின் அருள்நோக்கம் அழியினும் அவலம்கொண்டு அழிபவள்; என வாங்கு, 20 'வினைவெஃகி நீசெலின், விடும்.இவள் உயிர் எனப் புனையிழாய் ! நின்நிலை யான்கூறப், பையென நிலவுவேல் நெடுந்தகை; நீளிடைச் செலவு ஒழிந்தனனால், செறிக நின்வளையே!” தலைமகன் பிரிவுணர்ந்த தோழி, பொருள் காரணமாகப் பிரிந்து, இத்தகைய வழியிற் போவாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/85&oldid=822341" இலிருந்து மீள்விக்கப்பட்டது