பக்கம்:பாலைப்புறா.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 103

மனோகர். முகத்தை ஆடாமல் வைத்திருந்த கலைவாணிக்கு, ஆறுதல் சொன்னான்.

"மூன்று மாசமும், மூன்று நாளாய் ஓடிடும். அதோட... நீ ஊருக்குப் போகப் போறே... அங்கே போனதும், நாமா இப்படி அழுதோமுன்னு சிரிக்கப் போறே...”

‘பொய்... நான் ஊருக்குப் போறதாய் இல்ல...’

"ஏன் இங்கேயும் மகளிர் சங்கம் வந்துட்டதாலயா?”

"ஒங்க புத்தி அப்படி... இங்கே இருந்தால், உங்களோட அடிக்கடி போன் பேசலாம்... தினமும் பேச முடியாவிட்டாலும், ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது பேசுங்க”

‘அவ்வளவுதான்... கையிலே இருக்கிற டாலர் கரைஞ்சிடும்...’

"அப்போ நானே பேசுறேன்... நைட்ல கரெக்டா பத்து மணிக்கு ரூம்ல இருக்கணும். டெலிபோன் பேசற அளவுக்கு எங்கிட்ட பணம் இருக்குது. அப்பாம்மா கொடுத்த பணம், டெலிபோன்லே எப்படித்தான் பேசப் போறேனோ. ஒரே அழுகையா வரும். ஏங்க... அதை டெலிபோன் கோளாறுன்னு ‘கட்’ பண்ணிடாதீங்க”

"இதுக்குத்தான் ஊருக்குப் போன்னு சொல்றேன்...!”

‘மாட்டேன்... மாட்டவே மாட்டேன். என் ஸ்ரீராமனுக்கும், எனக்கும் பாலமாய் டெலிபோன் என்கிற அனுமார் கிடைக்கிற இடமே... என்னோட இடம்!’

இதுவரை, அமைதியாக இருந்த மனோகரும், உணர்வுமயமானான். அவளை, இறுகத் தழுவி, முத்தமிட்டான். கண்களை, அவள் நெற்றியில் துடைத்து, குங்குமத்தைக் கலையவிட்டான். சிறிது... நேர மெளனப் பார்வைகளுக்குப் பிறகு, உற்சாகமாக சொன்னான்.

“கலைவாணி... ஒரு குட் நியூஸ் மெடிக்கல் டெஸ்ட்டுலே நான் அவுட் ஸ்டாண்டிங்... ஹெச்.ஐ.வி. இல்லவே இல்லே...”

‘ஏன் இப்படி... அபத்தமா பேசுறீங்க... இது ஏன் ஒங்களுக்கு வரப் போவுது’

மனோகர், மெளனம் சாதித்தான்... அவனைப் பாடாய்படுத்தி, பரிசோதித்த டாக்டர்கள், ஓகே சொல்லிட்டார்கள். அது இருந்திருந்தால், எழுதாமலா இருப்பார்கள்? ஆனாலும் இவளிடம் எங்கப்பன் குதிருக்குள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/103&oldid=1405100" இலிருந்து மீள்விக்கப்பட்டது