பக்கம்:பாலைப்புறா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

க. சமுத்திரம்

ஏழை பாழைகள்... ஒருத்தருக்கு ‘பாப் இசையாகவும், இன்னொருத்தருக்கு ஒப்பாரியாகவும், கேட்கக்கூடிய விமானச்சத்தங்கள்; இத்தனை அமளியிலும், வாளிப்பான மேனிகளில், சீருடை சிக்கெனப் பற்றிக் கொள்ள, துடைப்பங்களை, செங்கோல் போல் நிமிர்த்தி பிடித்து நடந்த துப்புரவுத் தொழிலாளப் பெண்கள்.

சிறிது நேரம், அங்குமிங்குமாய் கண்களைச் சுழலவிட்ட கலைவாணி மனோகரை பெருமிதமாய் பார்த்தாள். கூட்டத்தில் சிக்கியவனை, தன் பக்கமாய் வரும்படி, கண்ணடித்துக் கூப்பிட்டாள். அவனும் தன்னை பிராண்டி எடுத்த அடுக்குமாடி வாசிகளையும், 'ஜோக்'அடித்த சகாக்களையும் விட்டு விலகுவது தெரியாமல் விலகி, அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசும் சமயம் பார்த்து, கழட்டிக் கொண்டான்; கலைவாணியின் மூச்சு படும் நெருக்கத்தில் நின்று கொண்டான்; கலைவாணி... கேட்டாள்.

“அதோ...பூப் போட்ட டை கட்டுன ஆசாமி. கேன்டின் பக்கமாய் நிற்கார் பாருங்க... மாநிறமாய், அவரு யாரு... ஏன் அப்படி கப்பல் மூழ்குவது மாதிரி இருக்காரு!”

‘அப்படி மூழ்கினால் அவன் சந்தோஷப்படுவான். பொல்லாதவன்... என்னோட சகா... பேரு சங்கரன்... எனக்கும் சீனியர்... மொதல்ல அவனைத்தான் கம்பெனி அனுப்புறதாய் இருந்தது. கடைசி நேரத்தில் அவனுக்குப் பதிலாய் என்னை செலக்ட் செய்திட்டாங்க.‘

"எதுக்காம்?”

"நீ சொன்னியே விசுவாசம்... அந்தக் காரணம்தான். ஆசாமி, கம்பெனி செலவில் போய்... போட்டிக் கம்பெனி வச்சுடுவானோன்னு மேனேஜ்மெண்டுக்கு பயம் வந்துட்டாம்”.

‘விசுவாசம் பற்றி நான் சொன்னது எவ்வளவு சரியாயிட்டு பாருங்க. ஆனால் வெறும் யூகத்தை காரணமாய் சொல்ல முடியாதே’

‘கரெக்டா சொன்னே... டைபாய்டுன்னு சொல்லி ஒரு மாதம் லீவ் எடுத்திருந்தான். அந்த நோயையே காரணமாய் காட்டிட்டாங்க. அதுல இருந்து என்னை எதிரியைப் பார்க்கிறது மாதிரி பார்க்கான். நான் என்ன செய்ய முடியும்...? நான் போக முடியாதுன்னு சொன்னாலும், அவனை அனுப்ப மாட்டாங்க. வேறு எவரையாவது அனுப்புவாங்க. இது கூட அவனுக்குப் புரியமாட்டேங்குது’

“எப்படியோ... போகட்டும்... பார்க்க பாவமாய் இருக்குது.. அவர்கிட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/105&oldid=1405102" இலிருந்து மீள்விக்கப்பட்டது