பக்கம்:பாலைப்புறா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109 சங்கரன், பேசாமல் இருப்பதில், டாக்டர் சந்திராவுக்கு எந்த ஆச்சரியமும், ஏற்படவில்லை. கார் ஒட்டும் போது, அந்த பக்கமோ, இந்தப் பக்கமோ பார்க்க மாட்டான். உடம்பில் நமைச்சல் ஏற்பட்டால்கூட, அதை வெளிப்படையாய்க் காட்டிக் கொள்ளமாட்டான். ஏதோ தன்னந்தனியாய், பேடி வேடத்தில் இருந்த அர்ச்சுனன், துரியோதனன் படைகளை எதிர் கொண்டது மாதிரி, எதிரே வரும் கெளரவ வாகனங்களை எதிர்த்து, பயங்கரமான ஒரு பெரும் போரை நடத்துவது போல், காரை ஒட்டுகிறவன். இது பயமா அல்லது, கருமமே கண்ணான ஒன்றிப்பா என்பது அவளுக்குத் தெரியாது. சென்னை விமான நிலையத்திற்கு பத்து மணிக்கு வர வேண்டிய டில்லி விமானம், பன்னிரண்டு மணிக்குத் தான் வந்தது. விமான நிலையத்தில், அவளை எதிர்கொண்டழைத்த சங்கரன் பேசிய முதல் பேச்சே ‘அந்த கிராதகன் அசோகன் வரலையா...’ என்ற கேள்விதான். அதற்குப் பதிலாய், சந்திரா சிரித்தாள். அவன் புருவங்களை, காவடியாய் வளைத்த போது அவரும் ஒங்களை இப்படித்தான் நினைக்கார் என்றாள். உடனே ‘நான் ஆபீஸ்க்கு வேற போகணும்... சீக்கிரம்... குயிக்’ என்று சங்கரன் சொன்னதோடு சரி.

சந்திரா, தாய் மாமா மகனான இந்தச் சங்கரனிடம், டில்லி அனுபவங்களைப் பற்றிப் பேச துடித்துக் கொண்டிருந்தாள். புது டில்லியில், தமிழக அரசின் தமிழ்நாடு இல்லத்தில், தனி அறையில், இவனை நினைத்துக் கொண்டதால், தூக்கம் கெட்டதை, அவன் தலையில் குட்டிக் குட்டிச்சொல்ல வேண்டும். திரும்பி வரும் போது விமானத்தில், பக்கத்தில் உட்கார்ந்த ஒரு பாடாவதி கிழவிக்குப் பதிலாக, இவன் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்ததைச் சொல்ல வேண்டும்... இப்போது சொன்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/109&oldid=1405106" இலிருந்து மீள்விக்கப்பட்டது