பக்கம்:பாலைப்புறா.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1 12 பாலைப்புறா

"கண்ணு போட்டுடாதீங்க. நாங்க டாக்டருங்க பாவப்பட்ட பிறவிங்க. இருபது வருஷமா அசிஸ்டென்ட் சர்ஜன், அப்புறந்தான் சிவில் சர்ஜன். அதோட செக்குமாடு மாதிரி சுற்றுன இடத்தையே சுற்றி சுற்றி வரணும். நீங்க என்ஜினியருங்கதான், கொடுத்து வச்சவங்க. எங்களைப் போல எம்.பி.பி.எஸ். செலக்ஷன்லே இடம் கிடைக்காமல், என்ஜியரிங் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பு முடிஞ்சதும், நீங்க பிளைன்லே போறதும், நட்சத்திர ஹோட்டல்ல தூங்கிறதும், மாருதி கார்லே போறதும்... அடேயப்பா... நீங்கதான் கொடுத்துவச்சவங்க...”

"யார் கொடுத்து வைத்தாலும்... நான் கொடுத்து வைக்காதவன்...”

‘என்னை கட்டிக்கப் போlங்களே... அது போதாதா!’

‘அதனாலதான் அப்படிச்சொன்னேன்’.

"இந்தா பாருங்க”.

"தமாஷ்க்கே... இப்படி தடாலடியாய் கோபப்பட்டால் எப்படி? போகட்டும்... கான்பரன்ஸ்... எப்படி நடந்தது?”

‘விஞ்ஞான்பவன்னு ஒரு பெரிய கட்டிடம்... நான்கு பக்கமும் வாசல். கொள்ளை கலையழகு... பத்து மணிக்கு துவங்க வேண்டிய கான்பரன்ஸ்... சுகாதாரத்துறை செக்கரட்டரி லேட்டாய் வந்ததால... பதினோரு மணிக்கு துவக்கம்... பாதி டாக்டர்கள் 'ஷாப்பிங்’ போயிட்டாங்க... அதோடு எய்ட்ஸ் நோயோட தாக்கத்தைப் பற்றியும், அந்த நோயாளிகளை எப்படி அணுகணும் என்றும் ஒரு திட்டவட்டமான கொள்கை இல்லை... கத்துக்குட்டியான எனக்கே தாங்க முடியலே. கேள்வி பதில் நேரத்தின் போது, ஒரு கேள்வி கேட்டேன். ஒருத்தருக்கு...ஹெச்.ஐ.வி.இருப்பதாய் ஒரு டாக்டருக்கு தெரிய வந்து... அந்த நோயாளிக்கு திருமணம் நடக்கிறதும் தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட டாக்டர், அந்த திருமணத்தை தடுக்க முயற்சிப்பது தப்பான்னு கேட்டேன். பாருங்கத்தான்... அநியாயத்தை... கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த ஜாயின்ட் செகரட்டரி என்னைக் கண்டுக்கல... நான் சொல்றதை கேட்டுட்டு, கால் நிமிடம் மெளனமாய் இருந்துட்டு, அப்புறம் நெக்ஸ்ட் கொஸ்டின்னு சொல்லிட்டார். உடனே டாக்டர் அசோகன், எழுந்து அவரை உலுக்கு உலுக்குன்னு உலுக்கிட்டார். அப்படியும் அந்த ஜாயின்டு, அடுத்த கேள்வின்னு அலட்சியமாய் கேட்டார். உடனே அசோகன் வெளிநடப்பு செய்திட்டார்!’

‘அந்த கிராக்கனோட... பழகுறதை விடு... இல்லன்னா... ஒன்னையும் ஒரு வழி பண்ணிடப் போறான்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/112&oldid=1405110" இலிருந்து மீள்விக்கப்பட்டது