பக்கம்:பாலைப்புறா.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 113

‘அவரு ரொம்ப ரொம்ப நல்லவரு... அத்தான்’.

"எப்படியும் இருந்துட்டுப் போறான். அவன் பேச்சை என்கிட்ட எடுக்காதே. அப்புறம் எனக்கு ஒரே குழப்பம்... சந்திரா... ஹெச்.ஐ.வி. என்கிறாங்க. எய்ட்ஸ் என்கிறாங்க... என்ன இதெல்லாம்?”

‘ஹெச்.ஐ.வி. என்கிறது. ஒரு வகை கிருமியோட பெயர்... எய்ட்ஸ் என்கிறது, அது கொடுக்கிற நோயோட பெயர்... ஹெச்.ஐ.வி. என்கிறது ஹ்யூமன் இம்யூனோ டிபிசியன்சி வைரஸ். அதாவது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை முறியடிக்கும் கிருமின்னு பெயர். இந்த கிருமியா நோய் கொடுக்காது. ஆனால் நம்ம உடம்பிலே இருக்கிற எதிர்ப்பு சக்தியை தகர்த்து, எல்லா கிருமிகளும் உடம்புக்குள்ள வரதுக்கு வாசலை திறந்து விடும்... இந்த கிருமிகள், பல்கி பரவி, நம்மோட எதிர்ப்பு சக்தியை தகர்த்துட்டால் எந்த நோயும் வரும். ஆனால், வந்த நோய் உயிரோடுதான் போகும். இதனால்தான் இந்த கிருமி கிரியா ஊக்கியா இருந்து பல நோய்களுக்கு ஒரு கூடாரமாகுது... அதனால் தான்... இதுக்கு அகொயர்டு இமினோ டிபெஸியன்ஸி சின்ரோம் என்று பெயர்; இதோட சுருக்கம்தான்... எய்ட்ஸ்; அகொயர்டு என்றால் நாமாக தருவித்துக் கொள்கிற கிருமின்னு எடுத்துக்கலாம்...’

‘அய்யோ... எனக்கு கர்ப்பம் தரிக்காமலே மசக்கை வருது...தலை சுற்றுது’.

‘இது கேலிக்குரிய நோயும் இல்ல. கிருமியும் இல்ல...நம்ம உடம்பு ஒரு அற்புதமான கட்டுமானம்...இதனால்தான் பல மகான்கள் இந்த உடம்பைத் தந்த கடவுளை பொறியாளரின் பொறியாளர்’ என்று சொல்வாங்க...’

‘நம்ம உடம்புக்குள்ள இருதயம் ஒரே நாளில் 13 லட்சம் தடவை துடிக்குது... உடல் முழுக்க ரத்தம் தினமும் 14 கோடி மைல் தூரம் வரை பாயுது...நுரையீரல் ஒரு நாளைக்கு 23 லட்சம் தடவை மூச்சுவிடுது. நம்ம ரத்தத்தில் இருக்கிற வெள்ளை அணுக்கள், சமயம் பார்த்து, உடம்புக்குள்வரத் துடிக்கிற லட்சக்கணக்கான எந்தவகை கிருமிகளையும், உள்ளே வந்தா கொத்தி குதறிக்கொன்னுடும்...இதுக்கு நோய் எதிர்ப்புசக்தின்னு பேர்’...

‘பொதுவாக, கிருமிகள் நாலுவகை; மலேரியா, யானைக்கால் நோய்களை கொடுக்கிற பாரசைட் கிருமி, வெள்ளைப் போக்கை தருகிற பங்கஸ், காச நோயும் தொழு நோயும் கொடுக்கிற பாக்டீரியா, அம்மை வார்க்கிற வைரஸ். ஹெச்.ஐ.வி. என்கிறதும் ஒருவித வைரஸ்தான். வெயில் பட்டாலே செத்துப்போகிற அற்ப கிருமி. நம்மோட உடம்பு செல்லுலே ஆயிரக்கணக்கான மடங்கு சின்னது. ஆனால், எல்லா கிருமிகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/113&oldid=1405111" இலிருந்து மீள்விக்கப்பட்டது