பக்கம்:பாலைப்புறா.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலைப்புறா

114

கொல்லக்கூடிய வெள்ளை அணுக்களை, குறிப்பாய் இந்த அணுக்களோட டி.4 என்கிற தளபதி வெள்ளையணுக்களை கொன்னுடுது. தளபதி தோற்றால் சரணாகதிதானே... போரில் தோற்றுப்போற நாட்டுக்குள்ள நுழையற வெற்றி பெற்ற நாட்டோட படைவீரர்கள், எப்படி பெண்களை கற்பழித்து, வீடுகளை தீக்கரையாக்கி, சொத்துக்களை சூறையாடுகிறார்களோ, அப்படி சந்தர்ப்பம் தேடி நிற்கும் எல்லா கிருமிகளும் எதிர்ப்பு சக்தி இல்லாத இந்த உடம்புக்குள் புகுந்து, என்னென்ன நோயெல்லாம் கொடுக்க முடியுமோ அத்தனையையும் கொடுத்துடும்...’

சங்கரன் படபடப்பாய் கேட்டான் ‘நீ சொல்றது முன்னுக்குப் பின் முரணாய் இருக்கே சந்திரா. உடம்புக்குள்ளே நுழைகிற கிருமிகளை தாக்கி கொல்கிற வெள்ளை அணுக்கள் இதுங்கள எப்படி விட்டு வைக்குதுங்க...’

‘இங்கேதான் சூட்சுமம் இருக்குது... இந்த போக்கிரிக் கிருமிகள், வெள்ளை அணுக்கள் மாதிரியே வேடம் போட்டு நுழையுதுங்க... அப்பாவி வெள்ளை அணுக்கள்.... இதுகள... நம்மாளுன்னு நம்பி... உள்ளே அனுமதிக்குதுங்க. இப்படி இருக்க இடம் கொடுத்த அணுக்களை... இவை படுக்க வைக்குதுங்க... பகையாளிக் குடியை உறவாடிக் கெடுக்கிற கதைதான்... சரியான சகுனிக் கிருமிகள்... சகுனியைக் கொல்ல, ஒரு சகாதேவன் இருந்தான். ஆனால் இந்தக் கிருமிகளைக் கொல்ல, இதுவரைக்கும் யாரும் இல்லை... எதுவும் இல்லை.’

"பொல்லாத கிருமி தான்...இது புதுசா... பழசா...?” ‘நாட்டு வைத்தியத்தில ஒருவித மேக நோயின்னு சொல்றாங்க. சரியா தெரியல... புதுசோ, பழசோ, 1981-ஆம் ஆண்டு அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில், ஒரினச்சேர்க்கை சமூகத்திடம் இதன் பாதிப்பு தெரிந்தது. ஆனால், 1983-ஆம் ஆண்டு பாரீசில் உள்ள பாஸ்டர் ஆய்வு மையத்தில் லுக்மான்டேஜ்னியர் என்கிற விஞ்ஞானி, இந்தக் கிருமியைக் கண்டுபிடித்தார். தமிழ்நாட்டுலே 1987-ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். இதுதான் இந்தியாவிலேயே முதலாவது கண்டுபிடிப்பு... அதுவும் பிறத்தியாருடைய ரத்தம் பெற்ற, ஒருத்தருக்கு இந்த நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது...’

‘பல அரசியல்வாதிகளுக்கும் இருக்கிறதாய்’ ‘உண்மைதான்... நம் தலைவர்களில் சிலர். இதுலதான் பாசிட்டிவாய் இருக்காங்க. இந்த நோய் பிரபலமானதே...அது பிரபலஸ்தர்களை பிடிச்சதால்தான். பிரபல அமெரிக்க திரைப்பட நடிகர் ராக்ஹட்ஸன், பாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/114&oldid=1405112" இலிருந்து மீள்விக்கப்பட்டது