பக்கம்:பாலைப்புறா.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலைப்புறா

118

நிறுவனங்கள், எடுத்தாள, இந்தியப் பத்திரிகைகளும், மனோகரைப் பந்தாடி விட்டன. எய்ட்சின் பெயரால், இந்தியாவைப் பந்தாட நினைத்த மேற்கு நாட்டினருக்கு, இந்தப் பத்திரிகைகளே, அறிந்தோ அறியாமலோ அறிவிப்பாளராகிவிட்டன. எய்ட்ஸ் நோயைப் பற்றியோ அல்லது அதைத் தரும் கிருமிகளைப் பற்றியோ இலக்கணம் வகுக்கப்படாத சமயம் என்பதாலோ என்னவோ, இந்தச் செய்தியே, எய்ட்ஸை விடக் கொடுரமாகி விட்டது.

‘அமெரிக்கா என்ன இந்தியாவா... பொறியாளர் மனோகர், எய்ட்ஸ் பொறிக்குள் சிக்கிய கதை’.

‘எஞ்சினியர் மனோகருக்கு எய்ட்ஸ் நோய்; கண்டபடி சல்லாபம் செய்தவர்க்கு நேர்ந்த கதி...’

‘தமிழ்நாட்டு எஞ்சினியருக்கு எய்ட்ஸ்... அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்'.

‘ஹெச்.ஐ.வி. எஞ்சினியர் அமெரிக்காவில் இருந்து திரும்பி அனுப்பப்படுகிறார்.'

"ஹெச்.ஐ.வி. இன்பெக்டட் இன்டியன் சென்ட்பேக் ஹோம்” இந்தப் பத்திரிகை செய்திகளின் ஒவ்வொரு எழுத்தும், ஒரு எய்ட்ஸ் கிருமி போலவே, பீதியை எழுப்பியது. இந்த நோயைப் பற்றி தெரிந்த உண்மைகளைவிட, தெரியாத கைச்சரக்கே, அந்த செய்திக்குப் பின்னணியாக எழுதப்பட்டிருந்தது. 'எய்ட்ஸ் நோயாளியைத் தொட்டாலே, நோய் தொற்றிக் கொள்ளும். அவர்கள் எச்சில்பட்டாலே, பட்டவர்கள் எச்சமாவார்கள்.... எய்ட்ஸ் நோயாளியைத் தனியாய் வைக்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையிலும், அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டியதுதான். அதே சமயம், அவர்களுக்கு நாமே உணவாகி விடக் கூடாது. உணவு கொடு. ஆனால் தொலைவில் நின்று தூக்கி எறி. இருக்க இடம் கொடு. ஆனால் பக்கத்தில் வைக்காதே. ஆறுதல் சொல்... அதற்காக முதுகைக் கூட தட்டிக் கொடுக்காதே... எய்ட்ஸ் உனக்கும் வந்திடும்...’

அந்தச் செய்தி, இப்படிப் பச்சையாக சொல்லவில்லையானாலும், படிப்பவர் மனதில் இப்படிப்பட்ட கொச்சைத்தனந்தான் எஞ்சி நிற்கும்படி வெளியிடப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி தாங்கிய பத்திரிகைகளை, கலைவாணி வருவித்துக் கொண்ட விதமே தனிச்செய்தி. மனோகர் வேலை பார்க்கும் அந்த நிறுவனம், நியூயார்க்கில் உள்ள ஒரு பன்முக பன்னாட்டுக்கம்பெனிக்கு, கணிப்பொறித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/118&oldid=1405116" இலிருந்து மீள்விக்கப்பட்டது