பக்கம்:பாலைப்புறா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தும் விளைச்சலும்

அரசுப் பணியிலிருந்து, அண்மையில் நான்ஒய்வுபெற்ற போது, எனது செய்தித் துறை ஆசானும், பிரபலமான செய்தியாளரும், அகில இந்திய வானொலியில் பெரும் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவருமான திரு.கே.ராமநாதன் அவர்கள், நான் நன்னடத்தையுடன் கூடிய சிறை வாழ்க்கைக்குப் பிறகு, வெற்றிகரமாய் விடுதலை ஆனதற்கு வாழ்த்து தெரிவித்தார். இருபதாண்டுகளுக்கு முன்பு, செய்திக்கு இலக்கணமாக அவர் என்னிடம் தெரிவித்த கருத்தை, இப்போது நினைவுபடுத்தினேன். “வருவதைப் படி... படித்ததை எறி... எது மனதில் நிற்கிறதோ, அதுதான் செய்தி...” என்றார். நான், நினைவுபடுத்திய போது, இது இலக்கியத்துக்கும் பொருந்துண்டா... இதைத்தான் நீ செய்யுறே” என்றார். உண்மையும் இதுதான். வாழ்க்கையில் கண்ட, கேட்ட, விசாரித்த நிகழ்ச்சிகளில் ஒரு சில என் மனதை வாட்டிக் கொண்டிருக்கும்; உள்ளம் முழுதும் அதுவே சிந்தனையாக இருக்கும்... இதற்கு வடிகாலாகத் தான் எழுதுகிறேன். இதில் வாசிப்பு சுகம் நோக்கமல்ல... என்னுடைய வாசகர்கள் அறிவு ஜீவிகளும் அல்ல. மாறாக, சமூக சிந்தன்ையாளர்கள், தமிழாசிரியர்கள், முற்போக்குத் தோழர்கள் தொழிலாளர்கள், சாதாரண பொது மக்களில் அசாதாரணமா னவர்கள். இவர்களே.என்.வாசகப் பரப்பு... இதைப்புரிந்துகொள்பவர்களால் மட்டுமே, என் இலக்கிய நேர்த்தியைப் புரிந்து கொள்ளமுடியும்...

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் களவிளம்பரத் துறையில், நான்காண்டுகளுக்கு முன்பு இணை இயக்குநராகச் சேர்ந்தேன்... அப்போது ஊரக வளர்ச்சித் திட்டங்கள், எய்ட்ஸ் விழிப்புணர்வு முதலியவை சம்பந்தமாக பல புத்தகங்களைப்படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது... எய்ட்ஸ் சம்பந்தமாக டாக்டர் ஜெயா ரீதரின் “எய்ட்ஸ் எரிமலை”, ஐ.நா. உலக சுகாதார நிறுவனத்தின் வெளியீடுகள் முதலியவற்றை கரைத்துக் குடித்தேன்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/12&oldid=635553" இலிருந்து மீள்விக்கப்பட்டது