பக்கம்:பாலைப்புறா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிதும் பயன்படும் தகவல்களைக் கொடுக்கும் எய்ட்ஸ் எரிமலையில், என்னைத்துக்கி வாரிப் போடும்படியான கருத்தை, அதில் வெளியான ஒரு பேட்டியில் படிக்க நேரிட்டது. எய்ட்ஸ் கிருமிகளால் தாக்குண்ட ஒரு இளைஞன், திருமணம் செய்து கொள்வது.அவனது விருப்பம் என்றும் இதில் தலையிட முடியாதென்றும், தேவைப்பட்டால், அவன் மனைவிக்கும் ஆலோசனை வழங்கலாம் என்றும், கூறப்பட்டுள்ளது. நான் கொதித்துப் போனேன். இந்த அணுகுமுறை, ஒரு இளம்பெண் சிறுகச் சிறுக சித்ரவதையாவதையாவதற்கு உடன்படுவதற்கு ஒப்பானது என்று கருதுகிறேன். எய்ட்ஸ் திருமணங்கள் நடப்பது தெரிந்தும், அதைத் தடுக்க முடியாதவர்களை, சமூக நேயர்களாக என்னால் கருத இயலவில்லை... இந்த இலக்கணப் பிழையை, பல்வேறு விழிப்புணர்வு அமைப்புக்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் சுட்டிக்காட்டி இருக்கிறேன. பல்வேறு விதமான சல்சாப்புக்கள்... திருமணம் ஒருவரது சொந்த விவகாரம் என்ற மழுப்பல்கள்... சட்டத்தில் இடமில்லை என்ற சாக்குப் போக்குகள்....

என் கொதிப்பு, இத்தகைய வேஷங்களால் ஆவேசமானது... இதன் விளைவுதான் பாலைப்புறா... பாலைவனத்தில் உள்ள மெலிந்த புறா என்றும், பாலியலால் பாதிக்கப்பட்ட புறா என்றும் எடுத்துக் கொள்ளலாம்... எனது ஆவேசத்திற்கு வடிகாலாக, நானே நடத்திய விழிப்புணர்வு இயக்கங்கள் இருந்ததால், இதனை படைப்பாக்கும் எண்ணம் உடனடியாக எழவில்லை... எழுத்தாளர் கோவி.மணிசேகரன்.அவர்களிடம், இந்த எய்ட்ஸ் திருமண அநியாயத்தை பேச்சுவாக்கில் குறிப்பிட்டபோது, இதை ஒரு விழிப்புணர்வு நாவலாக எழுது என்றார்... என்னால் மட்டுமே முடியும் என்றார்... எனக்கும் சரியாகப் பட்டது... தமிழகத்திலும், புதுவையிலும் கிட்டத்தட்ட அங்குலம், அங்குலமாக சுற்றுப்பயணம் செய்த எனக்கு, நிறையத் தகவல்களும், நேர்முக அனுபவங்களும் கிடைத்தன. இந்த நாவலில் வரும் முக்கால்வாசி அத்தியாயங்கள் நடந்த நிகழ்ச்சிகளே... என்றாலும் இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து எழுத பல தரப்பினரை சந்தித்து உரையாடினேன்... எய்ட்ஸ்கிருமிகளால் பாதிக்கப்பட்டாலும் அந்த நோயை புறந்தள்ளி... தொலைக் காட்சிகளிலும், கூட்டங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சென்னைவாழ் சேகர் அவரைக் கட்டிக் காத்த, விழிப்புணர்வு அமைப்பான சாப்-அதன்மூலம் எனக்கு பரிச்சயமான ஓரினச் சேர்க்கை இளைஞர்கள், இந்த நாவலின் பாத்திரங்களில்

நடமாடுகிறார்கள்.

xi

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/13&oldid=635564" இலிருந்து மீள்விக்கப்பட்டது