பக்கம்:பாலைப்புறா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிப்புணர்வு கூட்டங்களில் விலாவாரியான தகவல்களைத் தந்த டாக்டர். கிருஷ்ணமூர்த்தி, டாக்டர். காந்தராஜ், டாக்டர். ராதாகிருஷ்ணன், டாக்டர். ராஜலட்சுமி, டாக்டர். ஜெயா ஸ்ரீதர் ஆகியோர், இந்த நாவலின் உருவாக்கத்திற்கு தங்களை அறியாமலேயே உதவி இருக்கிறார்கள்... இது சம்பந்தமாக, நான் நடத்திய பட்டிமண்டபங்களில் கலந்து கொண்ட சென்னை தொலைக்காட்சி இயக்குநரும், சிறந்த எழுத்தாளருமான திரு.ஏ.நடராசன், பேராசிரியர் தி.ராசகோபாலன், வழக்கறிஞர் த.ராமலிங்கம், டாக்டர் அப்துல் காதர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் ச.செந்தில்நாதன், சுருக்கமாகப் பேசினாலும் சுருக்கென்று பேசும் வாலண்ட்ரி ஹெல்த் சர்வீஸ் அமைப்பின் செயலாளர்டாக்டர். முரளி, எனது களவிளம்பரத்துறை அதிகாரிகள், நேரு இளைஞர் மையங்கள், அறிவொளி இயக்கங்கள் போன்ற நிபுணர்களிடமிருந்தும் அமைப்புக்களிட மிருந்தும், மருத்துவ கருத்துக்களையும், மக்கள் விவகாரங்களையும் கற்றுக் கொண்டேன். இந்த வகையில், என் மனோ பூமியில் இவர்கள் ஒட்டு மொத்தமான வித்து; இதன் விளைச்சல்தான் பாலைப்புறா.

மூன்றாண்டுகளுக்கு முன்பு, இந்த நாவலை எழுதி, பல்வேறு பிரதிகளை எடுத்து, பெரியவர் வல்லிக்கண்ணன், அப்போது தமிழக அரசின் சுகாதாரத்துறையிலும், இப்போது உள்துறையிலும் பணியாற்றும், ஆங்கில கலப்பில்லாதமிழ் உரையாடலுக்குப் புகழ் பெற்ற பூரணலிங்கம் அவர்கள், கேட்போரை தங்கள் வசமாக்கும் பாக்டர். காந்தராஜ், டாக்டர். கிருஷ்ணமூர்த்தி, சென்னை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநரும், கரடு முரடு இல்லாததனித்தமிழில்உரையாடுகிறவரும், மிகச் சிறந்த இலக்கியவாதியுமான திரு.விஜய திருவேங்கடம் ஆகியோரிடம் படிக்கக் கொடுத்தேன்... உங்களுக்கு இந்த நாவல் நல்ல பெயரைக் கொடுக்கும்” என்றார் பெரியவர் வல்லிக்கண்ணன்; இதை, நான் தமிழில் வெளியிடாமல், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடநினைத்த போது, உங்கள் படைப்பு முதலில் தமிழுக்கு கிடைக்கட்டும் என்றார் பூரணலிங்கம் அவர்கள்... டாக்டர்காந்தராஜும், டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் இந்த நாவல் சிறப்பாக வந்திருப்பதாக தெரிவித்து மருத்துவச் செய்திகளை சரிபார்த்தார்கள். ஆலோனைகளையும் வழங்கினார்கள். இன்னொரு பிரதியைப் படித்த, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் வாலண்டரி ஹெல்த் சர்வீஸில் உள்ள எய்ட்ஸ் விழிப்புணர்வு

xii

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/14&oldid=635575" இலிருந்து மீள்விக்கப்பட்டது