பக்கம்:பாலைப்புறா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையத்தின் தகவல் நிபுணர் திரு.சிவன் அவர்கள், பெரிதும் பாராட்டினார், இந்த படைப்பை, தான் சார்ந்த அமைப்பும், தமிழக அரசின் எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு அமைப்பும் வாங்குவதற்கு, நான் விண்ணப்பிக்கலாம் என்று ஒரு அரிய யோசனையை வழங்கினார். இதன் அடிப்படையில், நான் மேற்கொண்ட முயற்சிக்கு இந்த இரு அமைப்புக்களும் உறுதுணையாக நின்று, மொத்தம் மூவாயிரம் பிரதிகளை வாங்க முன் வந்துள்ளன. இதற்கு காரணமானதமிழக அரசின் உயர்அதிகாரி திரு.பூர்ணலிங்கம்,எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் முன்னாள் இயக்குநரான திருமிகு. ராமசுந்தரம் - அந்த அமைப்பின் தகவல் நிபுணரான திரு.பழனிச்சாமி, வி.ஹெச்.எஸ். அமைப்பின் செயலாளரான டாக்டர். முரளி, இதன் எய்ட்ஸ் பிரிவின் இயக்குனர் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி, தகவல் நிபுணர் திரு.சிவன் ஆகி யோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகும். தமிழக அரசின் எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் முன்னாள் இயக்குநர் திரு.ராமசுந்தரம் அவர்களைப் போல், என்படைப்புக்களில் ஆர்வம் காட்டி ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு நல்கும் இந்த அமைப்பின் இப்போதைய இயக்குநரும், தமிழக அரசின் சுகாதாரத் துறையில் சிறப்புச் செயலாளரும், வெளிப்படையான நேர்மையாளருமான திரு.அலாவுதீன் அவர்களுக்கும், நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

இதை நேரடியாக வெளியிடுவதா அல்லது பத்திரிகையில் தொடர் கதையாக வெளியிடுவதா என்று ஆரம்பத்தில் யோசித்தேன். இறுதியாக, தினமணி ஆசிரியர் திரு.சம்பந்தம் அவர்களிடம், இதைக் கொடுத்தபோது, இருகரம் கொண்டு அதை வாங்கி, அப்போதைய இதழ் ஆசிரியரான ஞாநியிடம் ஒப்படைத்தார். இதை வெளியிடப் போவதாக கொள்கை அளவில் முடிவெடுத்திருப்பதாக ஞாநி தெரிவித்தார். ஆனாலும் தினமணிக் கதிரின் பக்க நெருக்கடியால், இது கிடப்பில் போடப்பட்டது. மக்கள் இலக்கியத்தில் மகத்தான தாக்கம் ஏற்படுத்தி வரும் என் தோழமை எழுத் தாளரான கு.சின்னப்ப பாரதி அவர்களுடன், தினமணி அலுவலகம் சென்று, ஆசிரியர் சம்பந்தம் அவர்களிடம், நாளாகும் என்றால் திருப்பிக் கொடுத்து விடுங்கள், என்றேன். இது, குளத்திடம் கோபித்துக் கொண்டு போனகதை மாதிரி என்பது எனக்குத் தெரியும்... ‘சரி எடுத்துட்டுப் போங்கள்’ என்று சம்பந்தம் அவர்கள், ஒரு நிமிடத்தில் சொல்லிவிட்டு, இதர வேலைகளை பார்த்திருக்க முடியும்... இப்படித்தான் சராசரி ஆசிரியர்கள் நடந்து

xiii

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/15&oldid=635586" இலிருந்து மீள்விக்கப்பட்டது