பக்கம்:பாலைப்புறா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்வார்கள். ஆனாலும் சிறியன சிந்தியாத பெரியவரான சம்பந்தம், நாவலைத் தர மறுத்ததுடன், விரைவில் வெளியிடப் போவதாகவும் வாக்களித்தார்...

தினமணிக்கதிரில், பிற்பகுதி அத்தியாயங்கள் வெளியிடப்பட்ட முறை குறித்து, என்ஆதங்கத்தை இதழ் ஆசிரியர் இளைய பெருமாளிடமும், உதவி ஆசிரியர்ராஜமார்த்தாண்டனிடமும் தெரிவித்ததுண்டு...அப்போதெல்லாம், இவர்கள் பொறுப்பாகவும், இனிமையாகவும், பதிலளித்தார்கள். இதனால் சொல்லப் போன கருத்தை இடையில் விட்டுவிட்டு, அவர்களுடன் நான்

உடன்பட்டேன்...

இந்த படைப்பிற்கு முன்னுரை வழங்கியுள்ள பிரபல பத்திரிகையாள ரான ஞாநி என்னுடைய நீண்டகாலத் தோழர்... இலக்கிய தளத்தில், எதிரும் புதிருமாக நின்றிருக்கிறோம்... நேர்கோடுகள்... எப்படியோ, நேர்மையான கோடுகள், ஒரு கட்டத்தில் சந்தித்தாக வேண்டும் என்பதற்கு நாங்கள் இருவரும் எடுத்துக் காட்டு... ஆனாலும், அவரது முன்னுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பெரும்பாலும் எனக்கு உடன்பாடானவை அல்ல... எனது இடதுசாரி படைப்புக்களை மனதில் வைத்து, அந்த வகை படைப்புக்கள் பற்றிய தனது கருத்தை அவர் வெளியிட்டிருப்பதாகவே கருதுகிறேன்... ஆனால் வாடாமல்லியும், இந்தப் பாலைப்புறாவும் வித்தியாசமானவை... இதில் வரும், தவசிமுத்து, சங்கரன், எஸ்தர் ஆகிய பாத்திரங்கள், யதார்த்த தளத்தில் எழுத்தெழுத்தாய் செதுக்கப்பட்டவை. இதே போல், கிராமத்து முற்போக்கு பெண்கள் பேசிக் கொள்ளும் பாணி, இன்றைய கிராமிய யதார்த்தம்... அறிவொளி இயக்கம், நேரு இளைஞர் மையம், களவிளம்பரத்துறை போன்ற அரசுஅமைப்புக்களின் தாக்கங்களை கணக்கில் எடுக்கும், ஒரே ஒரு எழுத்தாளர்.நான்தான் என்று நினைக்கிறேன். என்றாலும், ஞாநியின் கருத்துக்கள் ஆத்மார்த்தமானவை. நட்புக்காகவோ, தாட்சண்யத்திற்காகவோ, எழுதாதவர், எழுதத் தெரியாதவர். பல்வேறு வேலைப் பளுவுக்கு இடையே இந்த முன்னுரையை எழுதிக் கொடுத்த அவருக்கு நன்றி, அவரது கருத்துக்கள்.அவர் குறிப்பிட்டிருக்கும், அனைத்து

எழுத்தாளர்களையும் சிந்திக்க வைப்பவை...

இந்த நூலுக்கு அருமையான ஆய்வுரை வழங்கியிருக்கும் திரு விஜய திரு.விஜயதிருவேங்கடம் அவர்கள், என்னுடைய நீண்ட கால அலுவலகத்

xiv

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/16&oldid=635597" இலிருந்து மீள்விக்கப்பட்டது