பக்கம்:பாலைப்புறா.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 135

‘வருமோ வராதோ... அவங்க இங்கே இருக்கப்படாது...’

‘சரி... நாளைக்கு ஒரு ஆம்புலன்ஸ் கொண்டு வாரேன். நீங்க எல்லோரும் அந்த வண்டில ஏறி... ஆஸ்பத்திரிக்கு வரணும்...ஒங்க ரத்தத்தை டெஸ்ட் செய்றோம். ஒங்களுல ஒருத்தருக்குக் கூட எய்ட்ஸ் கிருமி இல்லன்னா, மனோகரையும் கலைவாணியையும் நான் ஒரேயடியாய்க் கூட்டிக்கிட்டுப் போறேன். சரியா...’

கூட்டம், சரியில்லை என்பதுபோல், சந்திராவைப் பார்த்தது. எதிரியாய் மிரட்டிப் பார்த்தது. இதுவரை, அவளோடு கண்ணியமாகப் பழகும் சங்கரன், அவள் பிடரியில் கைவைத்து கிட்டத்தட்ட தள்ளிக் கொண்டே போனான். அடிக்கடி திரும்பிப்பார்க்கப் போனவளை, வலுக்கட்டாயமாக திசைதிருப்பி விட்டான். இதற்குள்ள பேயறைந்த கூட்டத்தில், ஒரு பிசாசு சத்தம்...

‘அவள் கிடக்காள்... மனோகர்கிட்ட சொல்ற விதமா சொல்லுவோம். கேட்காவிட்டால், கட்டில், பேன், பீரோ, தட்டுமுட்டுச்சாமான்கள நாமே தூக்கி எறியலாம்’

'ஆமாம்... இப்பவே நம் மாதர் சங்கத்தை கூட்டி... மேற்கொண்டு என்ன செய்யலாமுன்னு ஆலோசிப்போம்...’.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/135&oldid=1405137" இலிருந்து மீள்விக்கப்பட்டது