பக்கம்:பாலைப்புறா.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 139

‘என்னைப் பார்க்காமல்... கையை ஏன் பார்க்கிங்க மிஸ்டர்... அது என்ன பிளாஸ்டர்...’

‘ஒண்ணுமில்ல... சார்... எய்ட்ஸ் நோ நோ... ஒரு சின்ன பிராக்சர் இல்லல்ல... பாத்ரூம்ல... வழுக்கி விழுந்துட்டேன். அதனாலதான் இந்த அசைன்மென்ட் வேண்டாமுன்னு’.

"வழுக்கி விழுகிறதுக்கும், நியூயார்க் போகாமல் இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?”

‘சம்பந்தம் இல்ல... ஆனால் அக்காவுக்கு கல்யாணம்’.

"இந்த வயசுலேயா? அக்காவுக்கா, அக்கா பொண்ணுக்கா.”

"இரண்டு பேருக்குமே... மனோகருக்கும்... எனக்கும். சாரி...சாரி... சாரி, சந்திராவுக்கும்... எனக்கும்...”

"என்ன சங்கர், ஒரே உளறலாய் இருக்குது... நியூயார்க்கிலயும், இப்படி உளறுனா எப்படி?”

‘எனக்கு... எனக்கு இப்போதைக்கு வேண்... வேண்டாம்... சார்’.

“லுக் மிஸ்டர் சங்கர் நீங்க சீனியராச்சேன்னுதான் ஒங்களை அனுப்பத் தீர்மானித்தோம்... ஒங்களைவிட, ரொம்ப... ரொம்ப... பிரில்லியண்டான ஜூனியர்ஸ் இருக்காங்க... நீங்க போகலாம்”.

"ஏ.ஜி.எம். என்னை தப்பாய்.”

‘உண்மையைச்சொல்லப் போனால், நீங்கபோக விரும்பாததில் எனக்கு சந்தோஷம். நீங்க போகலாம்... ஏன் போகாமல் நிற்கிறீங்க...? போங்க மிஸ்டர். மனோகருக்கு எய்ட்ஸ் கிருமி இருக்குதுன்னு இங்கே உள்ள நம் கம்பெனி ஆளு ஒருத்தன்தான்... நியூயார்க் ஏர்போர்ட்டுக்கு ‘கால்' போட்டு பேசியிருக்கான். அவன் யாராய் இருக்குமுன்னு தெரிஞ்சிக்கிறதுக்காக தலையை, இப்போ பிச்சுட்டு இருக்கேன். நீங்களும் சேர்ந்து பிய்க்காதீங்க... யூ கேன் கோ’.

‘கால் போட்டது சத்தியமாய் நான் இல்ல சார்’.

‘ஐஸி... இப்படி ஒரு ஆங்கிள் இருக்குதோ. ஓகே ஓகே. ஏன் பித்து பிடித்து நிக்கறீங்க... போறீங்களா? போக வைக்கணுமா? மிஸ்டர்... உங்களைத்தான்’.

சங்கரன், காலைத் தேய்த்து தேய்த்து, சூரிய நாராயணனைப் பார்த்து பார்த்து, மாயமாய் மறைந்து போனான். உடனே, மின்சார மணி பித்தானை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/139&oldid=1405141" இலிருந்து மீள்விக்கப்பட்டது