பக்கம்:பாலைப்புறா.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 பாலைப்புறா

கம்பெனிக்கு இன்னும் திறமையாய் உழைப்பேன் சார்... எதுக்கும் தனி ரூம்தாங்க சார்’.

“வெயிட்... மை எங்க்மேன் வெயிட்... ஒங்க கிட்டே எப்படிச் சொல்றதுன்னே புரியல. நான் கம்பெனி அல்ல... கம்பெனியோட கருத்தும்... என் கருத்தல்ல... ஒங்களைப் பார்த்ததும், வெளியேறுன சகாக்கள் வேற... எங்கயும் போகல... என்கிட்டதான் வந்தாங்க. உங்களை இனிமேலும் இருக்க வைக்கக் கூடாதுன்னாங்க. நான், எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். எதுல ரிஸ்க் எடுத்தாலும்,உயிருல ரிஸ்க் எடுக்கமுடியுமான்னு திருப்பி கேட்டாங்க. நோய் தொத்துற மலேரியா நோயாளியோடு பழகுறோம். அம்மை போட்ட நோயாளியோட பழகுறோம். ஆனால்... ரத்தம் தவிர வேற எந்த வழியிலும் பரவாத எய்ட்ஸ்காரனைப் பார்த்தால் பயந்து ஒடுறோம். பாருங்களேன், அநியாயத்தை... நீங்க செக்ஷனுக்குள்ள இருக்கிறவரைக்கும் அவங்க அங்கே போகமாட்டாங்களாம்... அதனால..."

"நான்... அக்கெளண்டன்டை போய் பார்க்கணும்... எய்ட்ஸ் என் கணக்கை முடிக்கும் முன்பே... நீங்க என் கணக்கை முடிச்சிட்டிங்க... அவ்வளவுதானே சார்?”

சூரியநாராயணன், தலை கவிழ்ந்தார். தோளைக் குலுக்கினார்; புறப்பட்ட மனோகரை பார்க்க முடியாமல் கண்களை மூடினார். அவன் வாசல் வழியாய் மறையப் போனபோது, ‘அடிக்கடி வாங்கோ மனோகர்’ என்று வாய்க்குள் புரளப் போன நாக்கிற்கு, வாய்க்குள்ளேயே சிறையிட்டு, அதை உதடுகளால் மூடிக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/142&oldid=1405149" இலிருந்து மீள்விக்கப்பட்டது