பக்கம்:பாலைப்புறா.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145

சு. சமுத்திரம்

எத்தனைபேரை தீர்த்துக் கட்டப் போறானோ, இந்த வீட்ட விட்டு எப்போ ஒழியப் போறானோ...’

மிஸஸ். எட்வர்ட் சாமுவேலின் கோபத்திற்கும் ஒரு ‘நியாயம்' உண்டு. இவளிடம் இருந்து மகனைப் பறித்துக் கொண்ட பழிகாரி ரோஸ்லின், அண்ணாநகரில் குடித்தனம் செய்கிறாள். புருஷன் டூர் போகும்போது மட்டும் இங்கே டேரா போடுவாள். அப்போது, பிரம்மச்சாரியா இருந்த இந்த மனோகர் பயலோடு மணிக்கணக்கில் பேசுவாள். ஒட்டி நிக்கிற மாதிரி பேசுவாங்க. ராத்திரியிலே என்ன நடந்துதோ... எவ்வளவு நேரந்தான் கண் விழித்து காவல் காக்க முடியும்...? ஏசுவே... மருமகள் ரோஸ்லினுக்கு வந்திருந்தால் நியாயம்... அவள் மூலம், என் சன்னுக்கும் வந்து இருந்தால் என்ன நியாயம்?”

வீட்டுக்குள் வேக வேகமாக நுழைந்த மனோகர் திடுக்கிட்டான். கலைவாணியைக் காணவில்லை. ஒருவேளை பாத்ரூமுக்கு... அக்கம் பக்கமாய்... -

முட்டிக் காலிட்டுக் கிடந்த மீனாட்சி, அவனைப் பார்த்ததும், எழுந்திருக்கக் கூட திராணியற்று, இருந்தபடியே கேவிக் கேவிச்சொன்னாள். ‘அக்கா... மத்தியானமே ஒரு சூட்கேசோடு போயிட்டாங்க. நான் காலக்கட்டிக்கிட்டு அழுதேன். அப்புறம், அந்தச்சமயம் பார்த்து, பாலாமாமி வீட்ல போயி கெஞ்சுனேன். அவங்களும் கேட்கல... அக்காவும் இருக்கல... மாயமாய் மறைஞ்சிட்டாங்க. அழாதீங்க அண்ணா. அய்யய்யோ அழாதீங்கண்ணா...’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/145&oldid=1405152" இலிருந்து மீள்விக்கப்பட்டது