பக்கம்:பாலைப்புறா.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலைப்புறா

148

நின்ற அந்த நிலையிலும், வாடாப்பூ, கலைவாணி போகும் திசையைப் பார்த்து முண்டியடித்தபோது, அதே ராமசுப்பு, மாரியப்பனை அவள் பக்கமாக தள்ளிவிட்டார். அதற்குள் வண்டியும் திரும்பிவிட்டது.

வீட்டு முன்னால், திடுதிப்பென்று வில் வண்டி நிற்பதைப் பார்த்து விட்டு, யாராக இருக்கும் என்ற தோரணையில், சிமெண்ட் தொட்டி டேப் வழியாக ஒழுகிய நீரில், சாம்பல் பூசிய பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த குழல்வாய் மொழி, இன்னும் அந்த வண்டிக்குள் இருந்து எவரும் இறங்காமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, ஒரு கையில் பாத்திரத்தைத் தூக்கியபடியே குனிந்தபடி, தலையை மட்டும் தூக்கினாள். அப்படியும் வண்டிதான் அங்குமிங்குமாய் நகர்ந்தது. குழல்வாய் மொழி முழுமையாய் நிமிர்ந்த சமயம் பார்த்து, வண்டியில் இருந்து, கலைவாணி கீழே குதித்தாள். வீட்டுக்கு வெளியே உள்ள திண்ணைக்கு வகிடான படிக்கட்டுக்களில் ஏறி, வாசல் படியைத்தாண்டி, முற்றத்தில் நின்று, நிதானிக்காமலே உள்திண்ணைப் படிகளில் தாவி, வலதுபுறமாக இருந்த தனது பழைய அறைக்குள் போய், தட்டுமுட்டுச் சாமான்களோடு கிடந்த கட்டிலில் போய் குப்புறப் படுத்துக் கொண்டாள். அக்காள் வருவதைக் கேள்விப்பட்டு, வெளியே இருந்து ஒரே ஒட்டமாய் ஒடி, முற்றத்திற்கு வந்த தம்பி பலராமன், அக்காவை அந்த நிலையில் பார்க்க மனங்கொள்ளாமல், அங்கேயே நின்றான். மண்வெட்டியில் தேங்காய் உறித்துக் கொண்டிருந்த அண்ணன் கமலநாதன், பாதி நார்க்குவியலோடு தேங்காயைப் போட்டு விட்டு, தங்கை இருந்த அறைக்குள் ஒடினான். எதுவுமே தெரியாமல், சமையலறைக்குள், வெந்து போன மரச்சீனிக்கிழங்கின் தோலைஉரித்துக் கொண்டிருந்த சீனியம்மா, குழல்வாய் மொழி காதில் கிசுகிசுத்ததை உள்வாங்கிக் கொண்டே ஓடினாள். திண்ணையில் சுவரோடு ஒட்டிப் போட்டிருந்த நார்க் கட்டிலில் ஒருச் சாய்த்துப் படுத்துக்கிடந்த சுப்பையா, படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாரே தவிர, இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ அசையவில்லை. தன்னைத் தானே பார்த்தபடி, தனக்குத்தானே மருவியபடி, கண்கள் நிலைகுத்த, அப்படியே இருந்தார்.

கட்டிலில் குப்புறக் கிடந்தவளை, அவளது அம்மா சீனியம்மா தோளைப் பிடித்து உலுக்கினாள். மகளின் கழுத்துக்குள் கையை விட்டு பின்புறமாய்த் தூக்கி, அவள் முதுகை தன் மார்பிலே போட்டுக் கொண்டு, புலம்பினாள்.

‘என்செண்பகப்பூவே... என் செவந்தி மலரே... ஒனக்காடி இந்தக் கதி? ஒனக்காடி...அய்யய்யோ...அய்யய்யோ கிளியை வளர்த்துப் பூனைகையிலே கொடுத்துட்டேனே. என் வாடா மலரே... நான் தவம் இருந்து பெத்த செல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/148&oldid=1405155" இலிருந்து மீள்விக்கப்பட்டது