பக்கம்:பாலைப்புறா.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 151

வும், கனகம்மாவும், கலைவாணி போகச் சொல்லியும், போகாமல் கிடந்தார்கள். இவர்களுடைய வீட்டுக்காரர்களும், மாரியப்பனாக மாறி வீடு வரை வந்துவிடக் கூடாது என்று கலைவாணிக்குப் பயம். இதற்குள், மனோகரின் தந்தை தவசிமுத்து உள்ளே வந்தார். எட்டுமுழ வேட்டியும், அரைக்கை பாப்ளேன் சட்டையுமாய், தோளில் ஜரிகைதுண்டோடு கல்யாணவீட்டிற்கு வருவதுபோல் வந்தார். அவரைப் பார்த்ததும், 'வாங்கண்ணாச்சி’ என்ற வாய் நிறைய கேட்கும் சம்பந்தி சீனியம்மா, பல்லைக் கடித்தபடி, முகத்தைத் திருப்பிக் கொண்டாள். குழல்வாய் மொழி, வழக்கம் போல் எழுந்திருந்து அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை. பலராமன், அவரை அடிக்கப் போவது போல் பார்த்தான். ஆனால் தவசிமுத்து, இதைக் கண்டாரோ... காணவில்லையோ, குப்புறப்படுத்த மருமகளிடம் நேரிடையாகப் பேசினார்.

‘நம்ம வீட்டுக்கு வரவேண்டியதுதானேம்மா... அப்புறமா இங்கே வந்திருக்கலாமே... ஊர் முறையும் அதுதானே’.

சீனியம்மா, உருமினாள்; கமலநாதன் தற்செயலாய் காறித்துப்புவது போல் வெளியே போய்துப்பினான். ஆனாலும் தவசிமுத்து அசரவில்லை.

"அந்தப்பயல் எப்படிம்மா இருக்கான்? அவனையும் கூட்டிட்டு வந்தி ருக்கலாமே பயநோய் நேரம் பார்த்து வந்திருக்கு பாரு... இன்னும் கல்யாணக் கடனே அடைபடல. மாதாமாதம் கடனஅடைப்பான்னு பார்த்தால்...”

கலைவாணி, வாரிச்சுருட்டி எழுந்தாள். கட்டில் கவரில் முதுகைச்சாத்தி, சுவரில் தலை போட்டபடியே கத்தினாள்.

"எம்மா... யாரும் என்கிட்டப் பேசப்படாதுன்னு சொல்லு உறவு சொல்லி யாரும் இந்த வீட்டுக்குள்ளே வரப்படாதுன்னு சொல்லு”.

தவசிமுத்து விடவில்லை... பதிலுக்குப்பதில் சொன்னார்.

‘என்னம்மா... நீ... மாமனார் என்கிற மட்டு மரியாத இல்லாமப் பேசுறே. ஒன்புருஷனப் பெத்து வளத்து பேரிட்டவன் நான்’

சீனியம்மாவால், இப்போது பொறுக்க முடியவில்லை.

‘புருஷன். எப்பேர்பட்ட புருஷன் பாவிப்பயல்... என்செல்ல மகள... கெடுக்கணுமுன்னே வந்திருக்கான். நான் இந்தப் பாவி மனுஷன்கிட்ட படிச்சுப் படிச்சு சொன்னேன். தராதரம் தெரியாதவன் வீட்டுலே சம்பந்தம் வேண்டாமுன்னு; பாவிப்பயல்; பன்னாடைப்பயல் கண்ட பொம்பளைக் கிட்டல்லாம் போயி, கடைசியிலே என் பொண்ணையும் அப்படிப் பண்ணிட்டான்; பண்ணாத அலங்கோலமாய் பண்ணிட்டான். பாவிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/151&oldid=1405163" இலிருந்து மீள்விக்கப்பட்டது