பக்கம்:பாலைப்புறா.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 பாலைப்புறா

‘அந்த மூதேவி... வெறுங்கையோட போனாளா... இல்ல நகை நட்டுக்களை தூக்கிட்டுப் போனாளா...’

"எந்த மூதேவி...?”

‘அதான் ஒனக்குன்னு வந்தாளே அவள்...’ ‘சீதேவியாய் இருந்த அவளை, மூதேவியாக்குனது நான்தான்’.

‘விதி யாரை விட்டுது... ஒன்னை, இப்படிதவிக்க விட்டுட்டு, ஊருக்கு வந்திருக்காள்... அவள் வீட்டுக்கும், நம்ம வீட்டுக்கும் ஒரே சண்டை... அடிதடி... ஒனக்கும் ஒரே ஏச்சு... பயமகள், அப்பனையோஅம்மாவையோ ஒரு வார்த்தை தட்டிக் கேட்கல... போகட்டும் விடு... அவரவர் புத்தி அவரோர்க்கு. நகைநட்டு என்னடாஆச்சு? பிடுங்கிட்டு துரத்தவேண்டியதுதானே'.

‘தாலியக் கழட்டிவச்சிட்டுப் போயிட்டாள்’.

‘சரி என்கிட்ட கொடு. நல்லதாப் போச்சு’. ‘தாலியையும், நகை இருக்கிற பேங்க் லாக்கரிலே வச்சிட்டேன்’.

‘லாக்கர் எதுக்குடா லாக்கரு... அவளோட நகை நட்டு இங்கே இருந்தால், அவள் அண்ணன் தம்பிமாரு... இங்க வந்து ஒன்னை மிரட்டி நகைய வாங்கிட்டுப் போயிடுவாங்க. அதனால் எல்லா நகையையும் என்கிட்ட கொடுத்துடு. பத்திரமாய் வச்சிக்குவேன். ஏன்னாஅவள் பிடிநம்ம கிட்ட இருக்கணும் பாரு’.

மனோகர், கோபமாக குறுக்கிட்டான்.

"இன்னொரு... விஷயத்தையும் சொல்றேன் கேளுங்க. கம்பெனியில இருந்து வேலை போயிட்டு. ஆனாலும் இரண்டு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்தாங்க. நானும் வாழணும் பாருங்க. ரூபாய் இங்கதான் இருக்கு... அவள் பேர்லயும், என்பேர்லயும், பேங்க்லே டிபாசிட் போடப் போறேன்.”

"என்னடா இது...? வம்பன் சொத்து, வீணன்கிட்டே போனது மாதிரி..”

‘நான் வம்பன்தான்; இந்தப்பணத்தை ஒங்ககிட்ட கொடுத்தால் நீங்க சொன்ன பழமொழி முழுசாயிடும்... கலைவாணி என்னை விட்டுப் போனாலும், அவள் கால்தூசிக்கு நீங்க பெறமாட்டிங்க. என்னை அடமானமாய் வச்சி, வேலை வாங்கித் தருவதா ஆயிரம் ஆயிரமாய் கமிஷன் அடிச்சிங்க... அந்தப் பாவம்தான் என்னை பிடிச்சிட்டு. இப்படிமுடக்கிப் போட்டுட்டு..’

‘நல்லா இருக்கே நியாயம். நீ கண்டபடி ஊர் மேயணும், அதுக்கு நான் பொறுப்பேற்கணுமா...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/158&oldid=1405175" இலிருந்து மீள்விக்கப்பட்டது