பக்கம்:பாலைப்புறா.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167

சு. சமுத்திரம்

பிடிக்கும். பேசாமல், முருகன் கோவிலுக்குப் போயிட்டு வா... பூவை தலையிலே வச்சிக்கம்மா... ஏன் கட்டுலுல வைக்கே'.

‘இந்தப் பூ... முருகனுக்கு. அவனுக்குத்தான், இது தகும். நான் தலையில் பூ வச்சிட்டுப் போனால், அந்த மனோகரை இன்னும் நான் புருஷனாய் நினைக்கிறதாய் அர்த்தமாயிடும்’.

சீனியம்மாவால், கைகளைத்தான் நெரிக்க முடிகிறது. உதடுகளைப் பிதுக்க மட்டுமே இயன்றது. மகளின் துக்கத்தை உள்வாங்க முடியாமல், அந்த அறையை விட்டு வெளியேறத்தான் முடிந்தது.

கலைவாணி, புடவையை மாற்றிக் கொண்டு, கூடை பின்னியதுபோல் சிக்கல் போட்ட தலை முடியை வாரிக்கொண்டு புறப்படப் போனபோது, வாடாப்பூவும் தேனம்மாவும் வந்து விட்டார்கள். கலைவாணி, வாடாப் பூவை செல்லமாக அதட்டினாள்.

"புருஷனுக்குத் தெரியாம இப்படியா திருட்டுத்தனமா வாரது அக்கா? தேனம்மா ஒனக்கும் சேர்த்துதான் சொல்றேன். அவன்கிட்ட இருந்து எனக்கு வந்தது, ஒங்களையும் ஒட்டுமுன்னு ஒங்க வீட்டு ஆம்பளைங்க குதிக்கப் போறாங்க.”

‘குதிச்சால் குதிக்கட்டும். ஒனக்கு வாரதுக்கு முன்னயே, எனக்கு வந்திருக்கும். உடம்பும் அப்படித்தான் ஆகிட்டு இருக்குது...’

‘தத்து பித்துன்னு உளறாதே... வாடாப்பூக்கா’ ‘உளறல... கலை. உண்மையைத்தான் சொல்றேன். என் வீட்டுக்காரன் என்கிட்டயே பெருமை அடிப்பான்... இந்தியா முழுவதும் நாற்பத்தஞ்சி நாளு லாரில போகும்போது, முப்பது நாளைக்கு அவனுக்கு அது இல்லாம முடியாதாம். அப்போ கணக்குப் போட்டு பாரு... ஆயிரம் பேர் கிட்ட போனாலும் ஒன்கிட்ட வார சுகம் எவள் கிட்டயும் இல்லன்னு வேற ஜம்பமாய் பேசுவான். பன்னிப்பயல்... எப்பாடி... பேசு முன்னாலே மூச்சி இரைக்குது’.

இருவரையும், கண்கலங்கப் பார்த்த தேனம்மா, பேச்சின் வெம்மை தாங்க முடியாமல், அதை மாற்றினாள்.

‘கலை... நீ போன பிறகு, மகளிர் மன்றக் கூட்டுக் குழுவோட போக்கே மாறிட்டு... இப்போது எல்லாமே ஆனந்திதான்... நாம் நட்டுன அடிக்கல்லை, ஒரு ஓரமா எடுத்து நட்டுட்டு, இந்த ஓலைக்கட்டிடத் திறப்புக்கு பெரிய பளிங்குக்கல்லாய் பதிச்சிருக்காள். அதில ஏகப்பட்டவனுவ பேர், இவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/167&oldid=1405204" இலிருந்து மீள்விக்கப்பட்டது