பக்கம்:பாலைப்புறா.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 173

ஒருத்தர் பேசவில்லை... எதிரே, அதே குமாரவேல் வந்தார். பெயருக்குரியவனைக் கும்பிட வந்திருப்பார். இவளைப் பார்த்ததும் லேசாய் நின்றார். இவளும் நிற்கத்தான் போனாள். ஆனால், தம்பியோ இவள் முதுகை ரகசியமாய் தள்ளிவிட்டான். குமாரவேல் போனதும், தம்பிக்காரன் அண்ணாவானான்.

‘இவனுவ கிட்டே இனிமேல் பேச்சு வச்சிக்காதே’ கலைவாணி, தம்பி வருகிறானா என்று பார்க்காமல், தன்பாட்டுக்கு நடந்தாள். சமயம் பார்த்து காத்திருந்த பழைய எண்ணங்கள், மறதிப்புற்றில் இருந்து அவள் மனதை அரித்தன. சீதாலட்சுமியோடு, புதிய பலராமனும் சேர்ந்து கொண்டான். முருகன், கல்லானான். அந்தக் கோவில் ஒரு கட்டிடமானது...

"எய்ட்ஸ் கிருமிகள், உணர்வுகளாகவும், ஓலங்களாகவும்கூட வேடம் போடுமோ?”

கலைவாணியின் மனம், சாக்கடைக்குள் முக்கப்பட்ட வெறுங்குடம் போலானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/173&oldid=1405215" இலிருந்து மீள்விக்கப்பட்டது