பக்கம்:பாலைப்புறா.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

174

19

"வாங்க மாமா!"

அந்த அறையில் இருந்து தப்பித்தவறி வெளியே வந்த கலைவாணி, திண்ணையில் நின்றபடியே, அண்ணனின் மாமனார் ஆறுமுக நயினாரை வரவேற்றாள். பிறகு, துக்கம் விசாரிக்க அவர் வந்திருப்பதாக அனுமானித்து, தூணைப் பிடித்தபடி தலை கவிழ்ந்து நின்றாள். அவரது ஆறுதல் வார்த்தைகளைக் கேட்க ஆயத்தமாய் நிற்பதுபோல் நின்றாள். ஆனால், ஆறுமுக நயினார் அவளைப் பார்க்காமலே ‘உம்’ என்று முற்றத்திலேயே நின்றார். இதற்குள், கட்டிலில் சாய்ந்திருந்த சுப்பையா, பக்கத்தில் கிடந்த நாற்காலியை தள்ளிவிட்டு உட்காரும்வே என்றதும், ஆறுமுக நயினார் திண்ணை ஏறினார். அதற்குள், மண்வெட்டிக் கணையை சக்கை வைத்து சுத்தியலால் சரிப்படுத்திக் கொண்டிருந்த கமலநாதன், அந்த மண்வெட்டியைத் தூக்கிப் போட்டு விட்டு, மாமாவை பொருட்படப் பார்த்தான். வட்டக் கண்ணாடியை முகத்துக்கு முன்னால் நிறுத்தி, பிளாஸ்டிக் பொட்டை நகர்த்திய குழல்வாய் மொழி, கையோடு ஒட்டிய பொட்டுப் பிளாஸ்டிக்கைக் கவனிக்காமலே, வெளியூரில் இருந்து வேர்க்க விறுவிறுக்க வந்த தந்தையை செல்லமாகக் கோபித்தாள்.

"ஒண்ணு காலையிலே வரணும்... இல்லன்னா சாயங்காலமாய் வரணும். இப்படியா உச்சி வெயிலுல வாரதுப்பா... அம்மா எப்படி இருக்காங்க”

ஆறுமுக நயினார் எதுவும் பேசாமல், மகளை ஒரு முறைப்பு பெரு முறைப்பாய் முறைத்தார். பனையைக் குடைந்தது மாதிரி நரைத்ததலை... உள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/174&oldid=1405252" இலிருந்து மீள்விக்கப்பட்டது