பக்கம்:பாலைப்புறா.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

176 பாலைப்புறா

"அம்மன் கொடைக்கு வரிப் போட்டாச்சா? நான் வரப்படாதா?”

"நல்லாவே வாரும், ஆனால் ஒம்மால... மகள விட்டுட்டு வர முடியுமா?”

"என்னவே ஆடு புலி ஆட்டம் ஆடுறீரு...?”

"ஆடுகள... புலி அடிக்கு முன்னால, அதைப் பத்திகிட்டு போறதுதானே நியாயம்?”

‘புரியும்படியாத்தான் பேசுமே...’

‘இதுக்கு மேலே எப்படி புரிய வைக்கிறது...? என் மகளையும், மருமகனையும் என் வீட்டுக்குக் கூட்டிப் போறேன். குழல் புறப்படும்மா. மாப்பிள்ளை ஒம்மையுந்தான்...’

சுப்பையா, ஆடிப்போனார். ஆறுமுக நயினார், ஏதோ ஒரு குண்டோடு வந்திருப்பதை அவர் புரிந்து கொண்டாலும், இது இப்படிப்பட்ட அணு குண்டாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை...

"வே... மச்சான்... புத்தி சுவாதீனத்தோடுதான் பேசுறீரா?”

‘புத்தி இருக்கிறதாலதான்... இப்படிப் பேசுறேன்... கலைவாணிக்கு வந்திருக்கிற இந்த நோய், மரம் விட்டு மரம் தாவுற குரங்குமாதிரி... நாலையும் யோசித்து விட்டுத்தான் இங்க வந்தேன். கலைவாணியை ஒதுக்குப்புறமாய் வையுங்கன்னு சொல்றதுக்கு எனக்கு உரிமை கிடையாது. ஆனால் நான் கண்ணுக்கு கண்ணாய் வளர்த்த என் மகளையும், அவளை பிடித்து அக்கினி வலம் வந்த மாப்பிள்ளையையும், ஆண் வாரிசு இல்லாத எனக்குக் கொள்ளி போடப் போகிற பேராண்டியையும் கூட்டிக்கிட்டுப் போறதுக்கு எனக்கு உரிமை உண்டு’.

"இப்படிப் பேச... ஒமக்கு எப்படிவே மனசு வருது?”

"நானா... வேணுமுன்னு பேசறேன்?... அந்த நோய் அப்படிப்பட்ட நோய்... எங்க ஊர் எம்.பி.பி.எஸ். டாக்டர்கிட்டயும் கேட்டேன். இந்த மாதிரி நோயாளியோட எச்சில் பட்டாலே போதுமாம். அவங்க ஒதுங்கிற இடத்தில நாம் ஒதுங்கினால், அதுவே எமனாம். குணப்படுத்தக் கூடிய காலரா, மலேரியாவே, பிறத்தியாரைத் தொத்திக்குமுன்னால், உயிரையே குடிக்கிற இந்த நோய் சும்மா விடுமா...?”

“சரிவே... வாதத்துக்காகவே பேசுவோம்... கலைவாணியோட ஒம்ம மருமகளும் ஒம்ம மருமகனும், ஒரு வாரமா பழகுறாங்க... இந்நேரம் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/176&oldid=1405254" இலிருந்து மீள்விக்கப்பட்டது