பக்கம்:பாலைப்புறா.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

178 பாலைப்புறா

‘என் மகளாய் இருந்தால்... இநநேரம் ஊருக்கு புறமாய் ஒரு குடிசை போட்டு வைப்பேன். இவளுக்கு வந்தது எல்லாருக்கும் வரணுமுன்னு அறிவு கெட்டதனமாப் பேசமாட்டேன்... வஞ்சகமாய் நினைக்கமாட்டேன்’.

பலராமனால், இப்போது பொறுக்க முடியவில்லை... ஆறுமுக நயினாரின் அருகே வந்து, மிரட்டும் குரலில் பேசினான்.

‘மாமா... வார்த்தைய அளந்து பேசுங்க... எங்கப்பாவை கேவலமா பேசுற எவனும் உயிரோட போகமாட்டான்’.

கமலநாதனுக்கு கோபம் வந்தது. தம்பியின் அருகே போய், அவனை அடிப்பதற்காக கையை ஓங்கியபடி, ‘பெரியவங்க, சின்னவங்க என்கிற மட்டு மரியாதை இல்லாமலா பேசுறே எங்க மாமனார் பேசுறதில என்ன தப்பு’ என்றான். ஓங்கிய கையை கீழே போடாமலே, தம்பியை அதட்டினான்.

‘இதுக்கு மேல பேசுனே பிச்சுப்பிடுவேன்பிச்சு...’

“எங்கே அடி பாக்கலாம்?"

‘மாமா... புறப்படுங்க... ஏன்டி ஒன்னத்தான்... ஏன் அசையாமல் நிக்கே... ஒன்னை எனக்குத்தான் கட்டிக் கொடுத்திருக்கு... இந்தக் குடும்பத்துக்கு இல்ல; புறப்படு. இவன் நம்ம அடிக்கும் முன்னாலயே போயிடலாம்’.

குழல்வாய்மொழி, புருஷனோடு புறப்பட்டாள். அப்போதுதான், அவளுக்கு குழந்தை ஞாபகம் வந்தது. மாட்டு தொழுவத்திற்கு அருகே உள்ள அறையில், தொட்டியில் தூங்கும் மகனை எடுப்பதற்காக நடந்தாள். இதைப் புரிந்து கொண்ட சீனியம்மா, மருமகளுக்கு முன்னால் ஒடி, குழந்தையைத் தூக்கி தோளில் போட்டாள். அதுவும் விழிப்பு தட்டி, அழுவதற்குப் பதிலாக, பாட்டியின் தலையில் விரல் விடப் போனது. இதனால், குழல்வாய்மொழி தயக்கம் காட்டியபோது, கமலநாதன் தாயின் பக்கமாய் போய் குழந்தையைப் பற்றினான். உடனே சீனியம்மா, முரண்டு பிடித்துக் கத்தினாள்.

"வேணுமுன்னா, என்னை அடிச்சுக் கொன்னுட்டு, என் பேரனைத் தூக்கிட்டுப் போடா".

கமலநாதன், அம்மாவை அடிக்கவும் முடியாமல், குழந்தையைப் பிடிக்கவும் முடியாமல் அல்லாடியபோது, பலராமன் அம்மா பக்கம் போய், கையிரண்டையும் நீட்டினான். அந்தக் குழந்தையும், சித்தப்பா பக்கமாய்த் தாவியது. இளைய மகனிடம், பேரப் பிள்ளை பத்திரமாக இருப்பான் என்ற நம்பிக்கையில், சீனியம்மா குழந்தையை சரித்தாள். தோளுக்குள் வந்த குழந்தையின் முதுகை சிறிது நேரம் தட்டிக் கொடுத்த பலராமன், பின்னர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/178&oldid=1405256" இலிருந்து மீள்விக்கப்பட்டது