பக்கம்:பாலைப்புறா.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சு. சமுத்திரம் 179

அந்தப் பிள்ளையை, அண்ணனிடம் ஒப்படைத்தான். இப்போது குழல்வாய் மொழிக்கே கோபம் வந்தது.

‘வாங்கப்பா... இவன் கழுத்தப் பிடிச்சி தள்ளு முன்னாலயே, நாம போயிடலாம்’.

சுப்பையா, கீழே குதித்தார். பலராமன் கன்னத்திலும் கழுத்திலும் மாறி மாறி அடித்தார். 'சண்டாளப் பயலே... அவங்க போறதுக்கு சாக்கு கொடுத்திட்டியேடா... சாக்காய் ஆயிட்டியேடா’ என்று அரற்றினார். இதையே ஒரு துக்கப் பின்னணியாக அனுமானித்து, ஆறுமுக நயினார் நடக்க நடக்க, கமலநாதனும், குழல்வாய்மொழியும் நகர்ந்தார்கள். என்னமோ நடக்குது என்பது மாதிரி திண்ணைத் தூணில் உடல் சாய்த்து நின்ற கலைவாணி, முற்றத்திற்கு தாவினாள். ஆறுமுக நயினார் முன்னால் வழி மறிப்பது போல் நின்றாள். பிறகு, தரையில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து, அண்ணனின் மாமனாரை சுமக்கும் கால்களை கட்டிப் பிடித்தபடியே புலம்பினாள்.

‘இன்னைக்கி ஒரு ராத்திரி மட்டும் டயம் கொடுங்க மாமா... நான் நாளைக்கு காலையிலேயே போயிடுறேன் மாமா... நானும் மனுஷிதான் மாமா... ரத்தம் தவிர வேறு எந்த வழியிலும் இந்த நோய் பரவாது மாமா... அதனாலதான் இங்கே இருந்தேன் மாமா... இப்போபுத்தி வந்துட்டு மாமா... ஒரே ஒரு ராத்திரி மட்டும், என் அண்ணன் தம்பி வீட்ல இருக்க அனுமதி கொடுங்க மாமா...’

கமலநாதனாலயே தாள முடியவில்லை. தங்கையைத் தூக்கி விட்டான். அவனுக்கு, அவள் போய்விடுவாள் என்பதில் பாதி சந்தோஷம்; அப்படிப் போகிறாளே என்பதில், மீதி வருத்தம்... ஒரு ஆட்டை அறுக்கும் போது வருந்தினாலும், அதை மஞ்சள் மசாலாவோடு தின்னும் போது சந்தோஷப் படுகிறோமே, அப்படிப்பட்ட துக்கம். மகிழ்ச்சி அவனுக்கு...

ஆறுமுக நயினாரே, இப்போது கலைவாணிக்குப் போகும் இடத்தை சொல்லிக் கொடுத்தார்.

"வேற எங்கேயும் போக வேண்டாம்மா... ஒன்னை இந்தக் கதிக்கு கொண்டு வந்தவன், வீட்டுக்குப் போ... அங்கே இருக்கவங்க தடுத்தால், ஊர்ப்பஞ்சாயத்த கூட்டுவோம்... என்ன மச்சான்... நான் சொல்றது”

சுப்பையா, எதுவும் பேசவில்லை... அறையை நோக்கி நடந்த கலை வாணியைக் கட்டியனைத்து, விம்மினார். ‘பாவிப்பய மகளே இந்த வீட்ல பிறக்கறதுக்குப் பதிலாய், வேறு எந்த வீட்லயாவது பிறக்கப்படாதா?" என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/179&oldid=1405257" இலிருந்து மீள்விக்கப்பட்டது