பக்கம்:பாலைப்புறா.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

183


டாக்டர் சந்திராவால், ஓய்வு நாளிலும் ஓய்ந்திருக்க முடியவில்லை... இரண்டு நாளாக பிரெஞ்ச் விடுமுறையில் போன டாக்டர் முஸ்தபா, அன்றைக்கும் வரவில்லை. நோயாளிகளில் விபரம் தெரிந்த ஒரு சிலர், உரிமையோடு வீட்டுக்கே வந்துவிட்டார்கள்... அவளுக்கு, வீட்டில் இருக்க முடியவில்லை. ‘கண்ணை மூடிட்டு இருந்துக்கோ' என்று அம்மா சொன்னாள். அப்படியே கண்ணை மூடினாலும், இந்த சுகாதார நிலையமும், நோயாளிகளும் விழிகளைத் திறந்தார்கள். மூடும்போதெல்லாம், கண்ணுக்கும், இமைகளுக்கும் இடையே நின்றார்கள்.

சந்திரா சுறுசுறுப்பாய் இயங்கினாள். முஸ்தபா வருகிறாரா என்று அடிக்கடி வெளியே எட்டிப் பார்த்தாள். டாக்டர் அசோகனை, மத்தியானச் சாப்பாட்டிற்குக் கூப்பிட்டு இருக்கிறாள். அவனும் இவள் நிலைமையை தெரிந்து வைத்திருப்பவன்போல், ‘கேரியர்ல. சாப்பாடு எடுத்துட்டு ஒங்க வீட்டுக்கு வாறேன்’ என்று அவர் புத்தியைக் காட்டிட்டார். அந்த புத்தியிலும் ஒரு புத்திசாலித்தனம் இருப்பது இப்போது புரிகிறது...

சந்திரா, நோயாளிக் கூட்டத்தை வெறுப்போடு பார்க்கவில்லை என்றாலும், சலிப்போடு பார்த்தாள். நல்லவேளையாக கூட்டம் அதிகமாக இல்லை; ஆயாக்களும் முஸ்தபாவும் விரட்டுற விரட்டலில், பாதிப்பேர் வருவதில்லை. இந்தப் பகுதியில், ஆரோக்கியம் அதிகரித்து விட்டதாக மேலதிகாரிகள் எடுத்துக் கொள்வார்கள்... பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவுமோ... இல்லையோ... புள்ளிக்கணக்கு, பப்ளிக்குக்கு உதவாது...

சந்திரா, ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு கைநாடி பார்த்தபோது, ஒருத்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/183&oldid=1405308" இலிருந்து மீள்விக்கப்பட்டது