பக்கம்:பாலைப்புறா.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

184 பாலைப்புறா

அல்லோகலோல்லமாய் ஓடிவந்தார். நாற்பது வயதிருக்கலாம்... வெளிப்படையாக ஆரோக்கியமானவராய்தான் தெரிந்தார். பல ரத்ததான முகாம்களில் இவரைப் பார்த்திருக்கிறாள். பரோபகாரி என்று நினைத்திருந்தாள். அப்புறந்தான்குட்டு வெளிப்பட்டது.

"என்ன... குணசீலன், வேளகெட்ட வேளையில வந்து...”

"நான்... வாரது எப்பவுமே நல்ல வேளைதாம்மா... என்னோட ரத்தம் ‘ஓ’ குரூப் ரத்தம்மா...அதுவும் நெகட்டிவ்ம்மா...அபூர்வமான வகைம்மா... ஒரு பாட்டில் ரத்தத்தை எடுத்துட்டு... முந்நூறு ரூபாய் இருந்தால் கொடுங்கம்மா... ‘ஓ’ குருப் நெகட்டிவ்..."

‘புளிச்சுப் போன பேச்சையே பேசாதீங்க மிஸ்டர்... ஒங்க ரத்தம் யாருக்கும் பயன்படாது... மொதல்ல வெளில போங்க... பேஷண்ட் பார்க்கிற நேரம்...’

‘இந்தா பாரும்மா... போகச் சொல்லுங்க போறேன்... அதுக்காக என் ரத்தம் பிரயோசனப்படாதுன்னு மட்டும் சொல்லாதீங்க... டாக்டர் சுமதியே என்கிட்டத்தான் வாங்குவாங்க... அடுத்தவாரம் வரச்சொல்லி இருக்காங்க... போகட்டும்... ஒரு ஐம்பது ரூபாயாவது கொடுங்க... அடுத்தவாரம் சுமதி அம்மா கிட்டே ரத்தம் விற்று...’

‘ஒரு பைசாதரமாட்டேன்... போகப் போறியா... இல்லையா...’

இப்போது, நோயாளிப் பெண்களில் ஒரு சிலர் எழுந்தார்கள். குணசீலனை நாயே பேயே என்று திட்டினார்கள். சத்தம் கேட்டு உள்ளே வந்த கம்பவுண்டர், குணசீலனை அதட்டுவதுபோல் பாவலா செய்து கொண்டே, அந்த ஆசாமியை இழுத்துப் பிடித்து, நடத்திக் கொண்டே, அவர் காதுகளில் கிசுகிசுத்தபடியே நகர்ந்தார். சந்திரா துணுக்குற்றாள். அதோ போகிற குணசீலன், ஒரு எதிர்கால எய்ட்ஸ் நோயாளி... மாவட்ட மருத்துவமனை யில், ரத்தம் எடுத்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.... இது டாக்டர் சுமதிக்கும் தெரியும்... அப்படியும் இந்த ஆசாமியை வரச் சொல்லி இருக்காள்... ஒருவேளை சாக்குப் போக்காக, இருக்கலாமோ... இருக்காது. அந்த பட்டுச்சேலை டாக்டருக்கு இதுதான் வேலையே... இந்த சுமதி கண்ணுக்கு தெரிந்த விஸ்வரூபம் எடுத்த எய்ட்ஸ் கிருமி... ஆனால் இப்போது இவள் காட்டில்தான் மழை... இதுல விழுகிற ஐஸ்கட்டியை பொறுக்கி எடுத்து... ஆனானப்பட்ட டாக்டர்... அசோகன் தலையிலேயே வைக்கிறவள். சொன்னால், பெண்ணுக்குப் பெண் பொறாமை... டாக்டருக்கு டாக்டர் சண்டை என்பார்கள். இந்த குணசீலனால், எத்தனை அப்பாவிகளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/184&oldid=1405311" இலிருந்து மீள்விக்கப்பட்டது