பக்கம்:பாலைப்புறா.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

186 பாலைப்புறா

பிறகு என்னைக் குத்துவியோ... வெட்டுவியோ... ஒன் இஷ்டம்’.

கலைவாணி, நாற்காலிமேல் உட்கார்ந்த சடமானாள். மூச்சுவிடுவது கூட மறந்தவள் போல், அந்த நாற்காலியில் புதுமையான மெத்தை போல் கிடந்தாள். சந்திரா, அவள் தோளைப் பிடித்து உலுக்கியபிறகே, அவள் கண் விழித்தாள். மோகன்ராமே! என் அம்மா கூடப் பிறந்த பெரியம்மா மகனே! நீயுமா அண்ணா? நீயுமாடா...?’

இரண்டு நிமிட இடைவெளிக்குப்பிறகு, சந்திரா கேட்டாள்.

‘அபார்ஷன் செய்ய நான் தயார். அது தேவையா என்கிறதுதான் கேள்வி. ஏன்னா... ஒன் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. இருக்கணும் என்கிற அவசியம் இல்ல... ஒரு சில எய்ட்ஸ் நோயாளியோட குழந்தைகளுக்கு இந்தக் கிருமிகளே இல்லை’.

‘கேட்கிறதுக்கு... சந்தோஷமாத்தான் இருக்கு... அந்த துரோகிப்பயல் கொடுத்த பிள்ளைன்னு நான் அபார்ஷனுக்கு வர்ல... என் பிள்ளை என் பிள்ளைதான். அதுவும் முதலும் கடைசியுமான பிள்ளை’.

"இப்படித்தான் பாசிட்டிவா... எடுக்கணும்...!”

"அதுதான்... எல்லாருமா சேர்ந்து என்னை பாசிட்டிவ்வாய் ஆக்கிட்டீங்களே... ஒழியட்டும்... என் குழந்தைக்கு அது இருக்குதா...? இல்லியான்னு இப்பவே கண்டுபிடிக்க முடியுமா?”

‘முடியாதும்மா... குழந்தை பிறந்த பிறகுதான் டெஸ்ட் செய்ய முடியும்... அப்படியே இருக்கிறதாய் தெரிஞ்சாலும், அது எய்ட்ஸ் கிருமின்னும் நிச்சயமாய் சொல்ல முடியாது... ஏன்னா ஹெச்.ஐ.வி. கிருமிகளை முறியடிக்க நம் ரத்தத்திலேயே ஆன்டிபாடி என்கிற எதிரணுக்கள் உற்பத்தி ஆகுது. இந்த எதிரணுக்கள் தாயிடமிருந்து... குழந்தைக்கும் கூடவே வருது... இது பதினைந்து மாதம் வரை, குழந்தை உடம்பிலே இருந்துட்டு, அப்புறம் மறைஞ்சிடும்... எதிரணுக்கள் இருக்கிறதாலயே அது எய்ட்ஸா ஆகிடாது. பதினைந்து மாதத்துக்கு பிறகும் குழந்தை உடம்பிலே எதிரணுக்கள் இருந்தால், அது ஹெச்.ஐ.வி. நான் சொல்றது புரியுதாம்மா!’

‘புரிய வேண்டாத அளவுக்கே புரியுது டாக்டர். ஒண்ணேகால், வருஷத்துக்குப் பிறகுதான்... என் குழந்தை இருக்குமா... போகுமான்னு தெரியும். அதுவரைக்கும், நான் உயிரை கையில பிடிச்சிட்டு இருக்கணும்... அப்படியே அதுக்கு இல்லன்னு தெரிந்தாலும், யாரும் நம்பமாட்டாங்க. அப்படியே நம்பினாலும், அந்தக் குழந்தை பத்து வருஷத்தில அநாதையாயிடும்... அதனால...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/186&oldid=1405314" இலிருந்து மீள்விக்கப்பட்டது