பக்கம்:பாலைப்புறா.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சு. சமுத்திரம் 187

"சரிம்மா... அபார்ஷன் செய்திடலாம்... மாலதி... மாலதி...”

கொண்டைக்கு உறை போல, வெள்ளைத் துணி கட்டிய ஒரு இளம் பெண் நிதானமாக நடந்தாள். என்னம்மா என்று கேட்டுக் கொண்டே வந்தாள். இந்த சந்திரா, இப்போதே சொல்லிவிட்டால் அவள் பக்கத்தில் போக வேண்டிய நடை மிச்சமாச்சே...!

மாலதி வருவது வரைக்கும் வாயைத் திறக்காத சந்திரா, வந்ததும் சொன்னாள்.

‘இவங்க பேரு... கலைவாணி... மூன்று மாசம்... அபார்ஷன் செய்யணும்... ஒரு பெட்ட ரெடி பண்ணுங்க...’

‘அனஸ்தட்டிஸ்ட் இல்லியே டாக்டர்’.

‘அதை நான்... பார்த்துக்கிறேன்... மாவட்ட மருத்துவமனையில் இருந்து வரைவழைக்கலாம்... இது குடும்ப நலத் திட்டத்தோட புள்ளிக் கணக்கிலே ஒண்ணு கூடுமுன்னு, அனஸ்தடிஸ்டை அனுப்பி வைப்பாங்க... இன்னிக்கும், நாளைக்கும் இவங்க ரெஸ்ட் எடுத்துக்கட்டும். புதன் கிழமை அபார்ஷன்’.

நர்ஸம்மாவான மாலதி, கலைவாணியை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். தலையை ஆட்டி ஆட்டிப்பார்த்தாள். சந்தேகப்படும்படியாய் பார்த்துவிட்டு, சந்தேகத்தைக் கேட்டாள்.

‘இவங்க... வெள்ளையன்பட்டிதானே டாக்டர்’.

"வெள்ளையன் பட்டியோ, கறுப்பன் பட்டியோ, எந்தப் பட்டியாய் இருந்தா என்ன சிஸ்டர்?... சீக்கிரமா பெட்ட ரெடி பண்ணுங்க... எனக்கு வீட்டுல தலைக்கு மேல வேலை..."

மாலதி, பிட்டம் குலுங்க நடந்தாள். யாரிடமாவது சொல்லாவிட்டால், தலை வெடித்துவிடும் போல் இருந்ததால், ஒட்டமும் நடையுமாக போனாள்.

இதற்குள், டாக்டர் சந்திரா, கலைவாணியிடம் நடந்த சங்கதிகளை ஒன்று விடாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தாள். இருபது நிமிடத்திற்கு மேல் ஆகியிருக்கும். அப்படியும் மாலதி வந்து ரெடிபடுத்தியதைச் சொல்லவில்லை. தானே போய், ஒரு பெட்டை ஆயத்தப்படுத்துவதற்காக சந்திரா நினைத்த போது...

டாக்டர் முஸ்தபா எதிர்பட்டார். ஒப்புக்காவது, "ஐயாம் ஸாரி” என்று கையாட்டிக் கொண்டே வருகிறவர், பல்லைக் கடித்தபடியே வந்தார். பக்கத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/187&oldid=1405315" இலிருந்து மீள்விக்கப்பட்டது