பக்கம்:பாலைப்புறா.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

188 பாலைப்புறா

நாற்காலியில் உட்கார்ந்த கலைவாணியைப் பாராததுபோல் பார்த்தபடியே, மேஜையைச் சுற்றிவந்து தனது நாற்காலியில் உட்கார்ந்தார். ரேக்கில் பேப்பர் வெயிட்டுக்குக் கீழே இருந்த இரண்டு நாள் விடுப்பு விடுமுறை விண்ணப்பத்தை சுக்கு நூறாக்கினார். அவர் எடுத்த வேகத்தில், பேப்பர் வெயிட் கீழே விழுந்து உருண்டு ஓடியது. சந்திராவும் அவரைக் கண்டுகொள்ளவில்லை... மாலதியையும் காணவில்லை. படுக்கையை ரெடி செய்வதற்காக, அவள் எழுந்தபோது, டாக்டர் முஸ்தபா, அவளைப் பார்க்காமல், கடுகடுப்பாய்ச் சொன்னார். கலைவாணியைப் பார்த்து திடுக்கிட்டபடியே டாக்டர் சந்திராவிடம், எரிச்சலோடு சொன்னார்...

‘நீங்க போகலாம் டாக்டர்...’

‘போகத்தான் போறேன்... அதுக்கு முன்னால ஒரு வேலை இருக்குது’.

"என்ன வேலை”.

“மாலதி சொல்லி இருப்பாளே”. "ஆமா... கேள்விப்பட்டேன்... ஒரு எய்ட்ஸ் நோயாளிக்கு எப்படி இங்கே அபார்ஷன் செய்யலாம்?”

‘ஒரு சின்ன கரெக்ஷன்... இவங்க எய்ட்ஸ் நோயாளியாய் இன்னும் ஆகல... ஒங்களாலயும், என்னாலயும் ஹெச்.ஐ.வி. நோயாளியா ஆக்கப்பட்டவங்க’.

"அதிகப் பிரசங்கித்தனம் வேண்டாம். ஒரு எய்ட்ஸ் நோயாளிக்கு ஆபரேஷன் செய்ய முடியாது.”

‘ஆபரேஷன் இல்ல... அபார்ஷன்... ஒரு பெண், தனக்கு குழந்தை வேண்டாமுன்னு சொல்லும் போது, அதை நிறைவேற்றாமல் இருப்பது சட்டப்படியான குற்றம்’

டாக்டர் முஸ்தபா எழுந்துவிட்டார். வீறாப்பாய் அவர் பேச வீம்பாய் இவள் பதிலளிக்க, ஊழியர்களில் அன்று வந்திருந்த கால்வாசிப்பேர் அங்கே கூடிவிட்டார்கள்.

"இங்கே அபார்ஷன் செய்து, இவங்களுக்கு ஏற்படுற ரத்தப் போக்குல, ஒங்களுக்கும், எனக்கும் இங்கே இருக்கிற எல்லாருக்கும் எய்ட்ஸ் பரவணுமா?”

‘நீங்கள்லாம்... ஒரு டாக்டரா மிஸ்டர் முஸ்தபா... ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே வேலை பார்க்கிற டாக்டருங்களுக்கு, மூளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/188&oldid=1405316" இலிருந்து மீள்விக்கப்பட்டது