பக்கம்:பாலைப்புறா.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சு. சமுத்திரம் 189

போயிடுமுன்னு ஆஸ்பத்திரி டாக்டருங்க சொல்றது சரியாத்தான் இருக்கு”.

"எனக்கு மூள இல்லங்கறியா?”

‘நீ நான்னு எனக்கும் பேசத் தெரியும் டாக்டர்... அபார்ஷன் செய்யும் போது... இரண்டு கையிலயும், உறைகளை போடுறோம்; முகத்தையும் மூடிக்கிறோம். இதையும் மீறி ஆண்டி செப்டிக்ல கையைக் கழுவுறோம். வெளியில கால்மணிநேரம் கூட வாழ முடியாத கிருமி. ஹெச்.ஐ.வி. கிருமி; அதுங்க உடனே செத்துடும். இந்த ஆரம்ப பாடம் ஒரு டாக்டருக்கு நிச்சயம் தெரிந்திருக்கணும்...’

‘என்ன ஆனாலும் சரி... நான் இதை அனுமதிக்க முடியாது’.

‘ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தால்...’

டாக்டர் சந்திரா, அப்படிச் சொல்லிவிட்டு, நாக்கைக் கடித்தாள். இதற்குள் குத்த வேண்டிய இடத்தில் குத்துப்பட்டதால், முஸ்தபா வலி பொறுக்க முடியாமல் கத்தினார். வார்த்தைகள் வராமலே பிடிபட்ட பன்றி மாதிரி கத்தினார். கம்பவுண்டர் அவரைப் பிடித்துக் கொண்டே, சந்திராவை பயமுறுத்துவது போல் பார்த்தார். உடனே அவள் பார்த்த 'இரண்டில் ஒன்று’ மாதிரியான பார்வையில், பயந்து போனார்... பக்குவமாய்க் கேட்டார்.

"டாக்டர்... அய்யா சொல்றதிலயும், ஒரு அர்த்தம் இருக்குங்கம்மா. இவங்களை கடிக்கிற கொசுவோ... மூட்டைப் பூச்சியோ, எல்லாரையும் கடிக்கும்... அப்போ இவங்க உடம்பு ரத்தம்... நம்ம உடம்புக்கு வருமே... இதுக்கு என்ன சொல்றீங்க?”

‘அரைகுறை அறிவு ஆபத்து சார். அரைக்கிணறு தாண்டுறது மாதிரி... கொசுவுக்கோ மூட்டைப் பூச்சிக்கோ... ஒருத்தரோட ரத்தத்தை எடுக்க தெரியுமே தவிர, கொடுக்கத் தெரியாது. ரத்தத்தை இதுங்க உள்வாங்குமே தவிர, வெளிப்படுத்தாது...’

"அப்போ... மலேரியா எப்படி வருதாம்? கொசுதானே அதற்கு காரணம்!”

‘நல்லா கேட்டிங்க... மலேரியா நோய்க்கு காரணமான ஒரு வகை கொசுக்களோட உமிழ்நீரில் பிளாஸ்மோடியம் என்கிற மலேரிய ஒட்டுண்ணி இருக்குது. கொசு ஒருத்தரை கடிக்குமுன்னால, அவர் உடம்பிலே துப்பிட்டு அப்புறந்தான் கடிக்குது. அந்த ஒட்டை வழியா இந்த எச்சியில் இருக்கிற ஒட்டுண்ணிங்க... கடிப்பட்டவர் உடம்புக்கு உள்ளே போயிடுது. சரி... கொசு கடிச்சு அதோட ரத்தம் நம்ம உடம்புக்குள்ளே போகாதுதான்... அதே சமயம், எய்ட்ஸ் நோயாளியை கடித்த அந்தக் கொசுவோ மூட்டைப் பூச்சோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/189&oldid=1405317" இலிருந்து மீள்விக்கப்பட்டது