பக்கம்:பாலைப்புறா.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

190 பாலைப்புறா

இன்னொருத்தரை கடிக்கும் போது, அவரு அதை நசுக்கி இதனால அவரோட உடம்புக்குள், ரத்தத்தில் இந்த கொசு ரத்தம் கலந்து, எய்ட்ஸ் கிருமி போகலாமேன்னு ஒரு சந்தேகம் வந்து, இதையும் ஆராய்ச்சி செய்தாங்க. அப்படி ஏதும் இல்ல... காரணம் எய்ட்ஸ் கிருமி மனித உடம்பு ரத்தத்தில மட்டுமே உயிர் வாழும். கொசு வயித்துக்குள்ளே போன உடனேயே செத்துடும். ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினியர், அந்தத் துறையில் நடக்கிறதை ஆறுமாதம் கவனிக்காவிட்டால், அவர் அவுட்டு... தொடர்ந்து படிக்காட்டால், தொலைஞ்சிடுவாங்க. ஆனால் நாங்க டாக்டருங்க... அப்படி இல்ல. எங்க துறையில் என்ன நடக்குதுன்னு தெரியாமலே பிழைப்பை நடத்தலாம். ஊசி போட்டு போட்டே, ஊசிப் போயிட்டோம். தொடர் கல்வி என்கிறது டாக்டர்கள்கிட்ட கிடையாது... எய்ட்சுன்னா... உதவின்னு அர்த்தப்படுத்துவாங்க.'

கம்பவுண்டர் ஆசாமி, முழு டாக்டரானது போல் தலையை ஆட்டிய போது, முஸ்தபா, பேண்ட் நழுவும்படிக் கத்தினார்.

“என்ன ஆனாலும் சரி... இங்க அட்மிட் பண்ண அனுமதிக்க மாட்டேன். நான், இன்சார்ஜ் டாக்டர். பத்தாண்டு சர்வீஸ்... இங்கே இருக்கிற ஊழியர்களையும், நோயாளிகளையும், காப்பாற்ற வேண்டியது என்னோட கடமை... டூட்டி... ஆப்ளிகேஷன், ஒங்களை மாதிரி கத்துக்குட்டி டாக்டர் இல்ல... நான்".

‘ஒங்க லட்சணம். நல்லாவே தெரியும் டாக்டர். மெட்ராசுக்கு போகிற அவசரத்தில் சண்முக வடிவுக்கு டுபெக்டமி செய்யும் போது காப்பர்-டியை உள்ளே தள்ளிட்டிங்க... அவள் வயிறு வீங்கிச் செத்துப் போனது. இங்கே இருக்கிற எல்லாருக்குமே தெரியும்’.

‘யானைக்கும், அடி சறுக்கும். ஆனால், ஒங்களை மாதிரி, டாக்டர்... அசோகனோட கூத்தடிக்கல...’

‘கூத்தடிக்கேனா... கூத்தடிக்காரோ. கீழே வேலை செய்யும் பெண்களை, உருட்டி மிரட்டி, அசோகன் ஒண்ணும் அவங்களை கூத்தியாரா ஆக்கல...’

கற்பழிக்கும் போதே, கையும் களவுமாய் அகப்பட்டதுபோல், முஸ்தபா முண்டியடித்தார். கம்பவுண்டர், அவருக்கும் சந்திராவுக்கும் இடையே போய் நின்று கொண்டார். இன்சார்ஜ் டாக்டர் ஆவேசமாய் பேசினார்.

‘நீ... ஒரு இன்சார்ஜ் டாக்டர் கிட்டே பேசிட்டு இருக்கே... என் அனுமதி இல்லாமல், எதுவும் நடக்காது. இவளை... அட்மிட் செய்ய முடியாதுன்னா முடியாதுதான்'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/190&oldid=1405318" இலிருந்து மீள்விக்கப்பட்டது