பக்கம்:பாலைப்புறா.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

193

21

டாக்டர் அசோகனைப் போலவே, அவன் மருத்துவமனையும் தனித்தும், தனித்தன்மையோடும் இருந்தது. மாடி இல்லாத ஒற்றைக் கட்டிடம். ஆனாலும், மேலே அவன் தங்குவதற்கான ஒரே ஒரு அறை. கீழே சத்திரம் சாவடி மாதிரி, அறை அறையாய்ச்செல்லும் பரந்து விரிந்த கட்டிடம். அதை இரண்டாகப் பிரிக்கும் அகலப் பாதை... முன்புறத்தில் இருந்து பின் புறத்தைப் பார்க்கலாம். ஆனாலும் அறைகளைப் பார்க்க முடியாது... சீருடை இல்லாத செவிலித்தாய்களான நர்ஸ்-கள்... காக்கிச்சட்டை போடாத பையன்கள்... ‘டாக்டர்’ என்பதற்குப் பதிலாக ‘அண்ணா... அண்ணா...' என்று கூப்பிடுகிறவர்கள்...

வரவேற்பு அறைக்கு எதிர்த்தார்போல் உள்ள முன்பக்கஅறையில், ‘எஸ்’ வடிவ நாற்காலியில் உட்கார்ந்திருந்த டாக்டர் அசோகன், ஏங்கி ஏங்கி அழுத மோகன்ராமைப் பார்த்து எழுந்தே விட்டான். இப்படி, பல இளைஞர்கள் அவனிடம் ‘விஷயம்' கேள்விப்பட்டு, அழுதிருக்கிறார்கள். ஆரம்பத்தில், அவர்களோடு சேர்ந்து அழுதவன்தான் இவன். ஆனால், மனம் மரத்துப் போனதோ... அல்லது பக்குவப்பட்டதோ, இப்போதெல்லாம் அழுவதில்லை. ஆனால், அடியும் தலையும் ஆணித்தரமாய் உள்ள இந்த மோகன்ராம் அழுவதைப் பார்த்ததும்,அவன் கண்கள் நீர் சிந்தவில்லையானாலும், நீருக்குள் நின்றன.

நாற்காலியில் இருந்து எழுந்து போய், முக்காலியில் உட்கார்ந்தவரை அசோகன் தட்டிக் கொடுத்தான். மருந்து கொடுத்தால் ஏழு நாட்களிலும், மருந்தில்லாமல் ஒரு வாரத்திலும் மறையும் அற்ப ஜலதோஷம், இவரை விட்டு ஒரு மாதமாகப் போகவில்லை; எல்லோரையும் மூன்றுநாள் ஆட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/193&oldid=1405367" இலிருந்து மீள்விக்கப்பட்டது