பக்கம்:பாலைப்புறா.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

194 பாலைப்புறா

வித்த டிங்கு ஜூரம் இவரை மூன்று மாதமாய் விடவில்லை. சிகிச்சையளித்த டாக்டர் சுமதியை, இந்த மோகன்ராம் அதட்டிக் கேட்க, அவள் சந்தேகப்பட்டு இவரை இங்கே அனுப்பிவிட்டாள். ரத்தத்தை டெஸ்ட் செய்தால், ஹெச்.ஐ.வி... சொல்லித்தான் ஆகவேண்டும்... சொல்ல வேண்டிய முறையில் சொல்லியாயிற்று... எவரையும் அழ வைக்கும் மோகன்ராம், முதலில் முரடனாகி, பிறகு சிறுவனாகி, இப்போது குழந்தையாகி விட்டார்.

‘டாக்டர்... நீங்க நம்ப மாட்டிங்க... ஆனாலும் சத்தியமாய்ச் சொல்லுறேன். என் பொண்டாட்டியைத் தவிர, எவளையும் தொட்டதில்லை. கெட்டதில்லை... நான் குணத்தில் வீமன்னாலும், குடும்ப வாழ்க்கையில ஸ்ரீராமன். ஆனாலும் நீங்க நம்பமாட்டிங்க. ஏன்னா, என் பெண்டாட்டியே என்னை நம்புறது இல்ல...’

‘நான் நம்புறேன் ஸார்’.

‘அப்போ... இது எனக்கு எப்படி வரும்...’

“எப்படி வருமுன்னு கேட்காதீங்க... எப்படி வந்ததுன்னு கேளுங்க... தகாத நடத்தையால மட்டுந்தான் இது வரணுமுன்னு இல்லை; எய்ட்ஸ் நோயாளிக்கு முகச்சவரம் செய்த ரத்தக் கத்தி, ஒங்க மேல பட்டிருக்குதா... பொம்பளைய ஏறெடுத்துப் பார்க்காத, நீங்க ஆம்புளகிட்ட போனது உண்டா..."

"என்ன டாக்டர் இது... இதைவிட ஒரு விஷ ஊசி போட்டுக் கொல்லுங்க..”

‘தப்பா நினைக்கப்படாது ஸார்... ஒரு டாக்டருக்கு, உடம்பை மட்டும் இல்லாமல், மனசையும் நிர்வாணப்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் வருவது சகஜம். ஒங்கள அசிங்கப்படுத்துறதுக்காக கேட்கல... அந்த அசிங்கமான உறவும் எய்ட்சுக்கு ஒரு காரணம்... அதனாலே கேட்டேன்’.

‘மிச்சம் மீதி... கேள்வியை ஏன் வைக்கீங்க... ஒன் பெண்டாட்டி எத்தன பேர்கிட்டே படுத்திருப்பான்னு, அதையும் கேளுங்க டாக்டர்.’

மோகன்ராம், மூடிய கண்களை கைகளாலும் மறைத்து, மறைந்த முகத்தை மேஜையிலும் கவிழ்த்தினார், முகமற்ற மனிதர்போல் குலுங்கினார். டாக்டர் அசோகனால் சமாளிக்க முடிந்தது...

‘அந்தம்மாவுக்கு’...

‘அவள் என்னை நம்பல... ஆனால் அவளை நம்புறேன் டாக்டர்... சீதாதேவியோ, சத்தியவான் சாவித்திரியோ, கெட்டுப் போயிருந்தால், அவளும் கெட்டு போனவள்தான்'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/194&oldid=1405368" இலிருந்து மீள்விக்கப்பட்டது