பக்கம்:பாலைப்புறா.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

196 பாலைப்புறா

இன்னும் வாயில வாசனையா நிற்குதுண்ணா. அதை ஒரு ரவுண்ட் பண்ணி 500ஆய் ஆக்கப்படாதாண்ணா’.

டாக்டர் அசோகன், இதற்குள் இன்ஸ்பெக்டரிடம் பேசி, முடித்து விட்டு ‘ஒகே... சார் ஆசாமியை விடல சார்’ என்று சொல்லி முடித்த உடனேயே, குணாளன் காணாமல் போய்விட்டார். தலையை சொறிந்து கொண்டிருந்த மோகன்ராம், கொதித்துப் போய் பேசினார்...

‘இந்த செறுக்கி மவன்தான்... எனக்கு ரத்தம் கொடுத்தவன். இந்த தேவடியா மகன்தான்...’

‘இவனா... அப்போ நிச்சயமா இவன் மூலந்தான் வந்திருக்கணும். இவன் ஒரு ரத்த வியாபாரி... இவனுக்கு எல்லா ஆஸ்பத்திரியும் எல்லா டாக்டரும் அத்துபடி... எய்ட்ஸ் உள்ளவன், அப்படி இருக்குன்னும் தெரிஞ்சவன்... எத்தன பேருக்கு எய்ட்ஸ் கொடுத்தானோ’.

‘என்ன டாக்டர்... இது அநியாயமாய் இருக்குது...? ஒரு கேள்வி முறை இல்லியா... ரத்ததானம் செய்தாலும்... அந்த ரத்தத்தை டெஸ்ட் செய்யுறதாய் வேற பீத்திக்கிறாங்க...’

“டெஸ்ட்... செய்யணும்... அதுதான் முறை நாட்டுல முறையில்லாமப் போறதே ஒருமுறையாயிட்டு... எனக்குக் கொஞ்சம் சந்தோஷம். இந்த பத்து நாளையில எவ்வளவோ மாறிட்டிங்க... எய்ட்ஸ் கிருமிகளோட வாழ்கிற அளவுக்கு பழகிட்டிங்க.”

மோகன்ராம், பதிலுக்கு பேசப்போன வாயை அகலமாக்கி, அப்படியே எழுந்தார். டாக்டர் சந்திராவுடன் உள்ளே வந்த கலைவாணியின் கைகளைப் பிடித்துக் கொண்டு விம்மினார்.

'நான் துரோகிம்மா... துரோகி... நீ இந்த நிலைமைக்கு வர்றதுக்கு நானும் காரணம்மா... ஆனால், நான் வேணுமுன்னு செய்யலம்மா... அதுக்கான பலனும் கை மேலயே கிடச்சிட்டும்மா’.

‘டாக்டரம்மா... நாம் போகலாமா? அப்புறமா வருவோம்’.

கலைவாணி, பெரியம்மா மகன் பிடித்த கைகளை உதறிவிட்டாள். வெளியே போவதற்காக முகம் திருப்பினாள். அவளைப் பிடித்துக் கொண்டே, சந்திரா, மோகன்ராமிட்ம் எரிந்து விழுந்தாள்.

"இப்போதான்... இவங்களைக் கெஞ்சிக் கூத்தாடி சரி செய்து கொண்டு வந்து இருக்கேன்... நீங்க அதைக்கெடுத்திடாதீங்க...!”

'டாக்டரம்மா... ஒங்களையும்...’

‘இந்த சினிமா வசனமெல்லாம் வேண்டாம். ஒன்னு நீங்க இங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/196&oldid=1405370" இலிருந்து மீள்விக்கப்பட்டது