பக்கம்:பாலைப்புறா.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சு. சமுத்திரம் 197

இருங்க இல்லாட்டால்... எங்கள இருக்க விடுங்க... தப்பு எங்க பேர்லேதான்... நாங்க, இவரு போன பிறகு, வாரோம் டாக்டர். வெளியிலே போய் நிற்கோம்’.

மோகன்ராம், தலைகவிழ்ந்தபடியே வெளியேறினார். தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டு, அதைக் கைகளில் போட்டுக் கொண்டார். அவர் போன நத்தை வேகத்தில் அறைக்கதவுகள்கூட ஆடவில்லை. டாக்டர் அசோகன் சந்திராவைப் பார்த்து புன்னகைக்காமலேயே கேட்டான்.

‘நீங்க இவ்வளவு கடுமையாய் பேசி இருக்கப்படாது’ ‘அதுக்கும் காரணம் இருக்கு டாக்டர்... ஒரு சின்ன அதிர்வுல கூட கலைவாணி, தன்னை... அறியாமலே ஏதாவது செய்திடலாம்... அந்த அளவுக்கு இவங்களை முஸ்தபா நோக வச்சிட்டான்’

டாக்டர் அசோகன், எதிர் நாற்காலியில் விக்கித்துப் போய் கிடந்த கலைவாணியையே உற்றுப் பார்த்தான். மான்குட்டிக்கு, சிங்கக்குட்டியின் கண்களை, டிரான்ஸ்பிளான்ட் செய்தது மாதிரியான உடல்வாகு... பார்வை... வெள்ளையன்பட்டி மருத்துவ முகாமில் அவள் துள்ளித் திரிந்த லாகவம், இன்னும் கண் முன்னாலயே விரிகிறது. எய்ட்ஸ் பற்றிப் பேசி முடித்த தன்னிடம், அவள் கேட்ட விளக்கங்களை, டாக்டர்களேகூட கேட்கமாட்டார்கள். கேட்க... தோணாது என்பதல்ல... கேட்கத் தெரியாது. இதனால்தான், ஐந்தாறு மாதத்திற்கு முன்பு, டாக்டர் சந்திரா ஆதியோடு அந்தமாக இவளைப் பற்றி விவரித்தபோது, ஒரு நாள் முழுவதும் சாப்பிட முடியவில்லை. சோற்றுக்கு பஞ்சமில்லை என்றாலும் சொல்லக் கொதித்த நெஞ்சம். பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பு இந்த கலைவாணி சென்னையில், சந்திராவை கீழே தள்ளிப் போட்டாலும், அவள் மீது இவனுக்கு கோபம் வரவில்லை...

சந்திரா, அசோகனிடம் நடந்ததை விளக்கினாள். பிறகு இப்படிச் சொன்னாள். ‘கலைவாணியை, நான் பிடிக்காவிட்டால், முஸ்தபா மண்டை உடைந்திருக்கும். அவன் மண்டை உடையுறதப்பற்றிக் கவலை இல்ல டாக்டர். கலைவாணி இந்நேரம் போலீஸ் லாக்கப்ல இருந்திருக்கணுமே'.

‘ஆனாலும், நீங்க அவசரக் குடுக்கை டாக்டர்’. 'எதுக்கெடுத்தாலும், என்னையே குறை சொல்லுங்க... இதுக்குத்தான் நான் இங்கே வருவதே இல்ல’.

‘இப்போ... கூட நான் ஏன் சொன்னேன்னு நினைத்துப் பார்க்காமல், எப்படிச் சொல்லாமுன்னுதான் நினைக்கிறீங்க முஸ்தபாவா இருந்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/197&oldid=1405371" இலிருந்து மீள்விக்கப்பட்டது