பக்கம்:பாலைப்புறா.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

198 பாலைப்புறா

வாரதும் வராததும் ஒங்க இஷ்டமுன்னு சொல்லி இருப்பான். நான் சொல்லமாட்டேன். பிகாஸ் ஒங்களை எனக்குத் தெரியும்... இருபத்து நாலு காரெட்... அப்படியே நகை செய்ய முடியாது’.

“ஐயாம் ஸாரி. டாக்டர்".

‘ஆனாலும்... கடைசியாய் ஒங்களைப் பற்றி... ஒரு ரவுண்ட்அப் செய்ய வேண்டியது என்னோட கடமை... நாம், நம்மை, நம்மோட நோக்கங்களை வைத்து எடை போடுறோம். ஆனால், வெளி உலகம், நம்மை, நம்மோட செயல்கள், அதன் விளைவுகள் இவற்றை வச்சே எடை போடுறாங்க... உதாரணமாய், நீங்க மனோகர் கிட்டே சொன்னது நல்ல நோக்கந்தான். ஆனால் அதோட விளைவு ஒங்களுக்கே தெரியும்... அப்போ சொல்வதைத் தான் இப்போ சொல்றேன். நீங்க மட்டும் மனோகரோட நிலைமையை கலைவாணியோட காதுலே போட்டிருந்தால், கதையே வேற... அப்புறம் கூட... உங்களுக்கு புத்தி வரல்ல. அந்த ஒட்டவாயன் சங்கரன்கிட்ட நடந்ததைச் சொன்னதால... அவன் நடக்கக் கூடாததை நடத்திக் காட்டிட்டான். இப்போக்கூட பாருங்க... எய்ட்ஸுன்னா. துண்டக் காணோம்... துணியக்காணோமுன்னு டாக்டர்களே ஒடுறாங்க... முஸ்தபாவோ முழு மூடன்... பேசாமல், கலைவாணியை இங்கே முதல்லயே கூட்டிக்கிட்டு வந்திருக்கலாமே... இது ஒங்க மருத்துவமனைதானே’.

கடைசியாய் சொன்ன வார்த்தைகளால், சந்திரா ஓரளவுக்கு சமாதானப்பட்டாள். ஆனாலும் ஒரு எரிச்சல். ஒருத்தர் கீழே விழுந்து கிடக்கும் போது, இப்படி அடிக்கப்படாது...

டாக்டர் அசோகன், இன்னமும் ஏறிட்டுப் பார்க்காத கலைவாணியைப் பார்த்துட்டு, சந்திராவிடம் கேட்டான்.

‘டிரான்குலைஸர். ஏதாவது கொடுத்தீங்களா!’

‘இல்ல டாக்டர்’.

“கலைவாணி. ஏன் இப்படி கவிழ்ந்து கிடக்கே...நிமிர்ந்து நில்லும்மா... உலக பாவங்களை சுமக்கிறதுக்காக, ஆண்டவர் வலுவான நல்லவங்களை தேர்ந்தெடுத்து, அவங்ககிட்ட சிலுவை சுமக்கக் கொடுப்பாராம். நான் கிறிஸ்தவன் இல்ல... ஆனாலும் இதை நம்புறேன். நீ வலுவானவள். பாவங்களுக்கு பரிகாரம் தேடுகிறவள். இதனால். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீ... தைரியாமாவே சிலுவை சுமக்கணும்... கமான். பீ சீயர்புல்..."

கலைவாணி, மெள்ள மெள்ள தலை நிமிர்ந்தாள். டாக்டர் அசோகன் முகத்தில் படர்ந்த புன்னகை, அவளை கால்வாசி பற்றி கொண்டது. அதுவே சோகத்தை பின்னுக்குத் தள்ளிக் கொண்டிருந்தது. அசோகன் தொடர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/198&oldid=1405372" இலிருந்து மீள்விக்கப்பட்டது