பக்கம்:பாலைப்புறா.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 201

பலருக்கு இல்லவே இல்ல. இதனால... ஒனக்கு ஹெச்.ஐ.வி. இல்லாமல் இருக்கவும் சான்ஸ் இருக்குது. ஆமாம்மா... நீ முட்டுறதும், மோதுறதும் நிழல் யுத்தமாய் கூட இருக்கலாம். இருட்டு வீட்ல இல்லாத கருப்புப் பூனையை தேடுறதாய் கூட இருக்கலாம்’...

கலைவாணியின் மொட்டு முகம், பூச்சரமாய் விரிந்தது. உடல், ஆகாயமும் பூமியுமாய் விஸ்வரூபம் எடுத்தது. காதுகளை நம்ப முடியாதவள் போல, கைகளால் பிடித்தாள். இந்த டாக்டர் சொல்வது நிசம்தானா என்று சந்திராவை, கண்களால் கேட்டாள். ‘எனக்கு எய்ட்ஸ் இல்லே இல்லே அப்பா.. இல்லப்பா. அம்மா இல்லம்மா... ஏய் ஆறுமுக நயினாரு... எனக் இல்லய்யா...மனோகரா... ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கிறாண்டா...’

கலைவாணி எழுந்தாள், உட்கார்ந்தாள். அந்த அறையை அப்போதுதான் பார்ப்பதுபோல் ரசனையோடு பார்த்தாள். ஒரு குதி போட்டு, மீண்டும் உட்கார்ந்தாள். பிறகுதான் கேட்டதை, மீண்டும் உறுதிப்படுத்த நினைத்தாள். மனோகர் மீது கூட சிறிது இரக்கம் ஏற்பட்டது. வாயெல்லாம் பல்லாகக் கேட்டாள்.

‘நீங்கள் சொல்றது நிசமாவா டாக்டர்’

“ஆமாம்மா... ஒனக்கு ஹெச்.ஐ.வி. இருக்கணுமுன்னு அவசியமில்ல. உண்டு இல்ல என்கிறது ஐம்பதுக்கு ஐம்பது...”

‘அய்யோ... எனக்கு இப்போ எப்படி இருக்குது தெரியுமா... சந்தோசம் தாங்க முடியல’

கலைவாணி, சந்திராவைக் கட்டிப்பிடித்தாள். அவளோ, இந்த விபரம் தனக்கு தட்டுப்படாமல், போய்விட்டதே என்பது போல், தன் தலையில் குட்டிவிட்டு, கலைவாணியை கட்டிப்பிடித்தாள். கலைவாணி துடித்துக் கேட்டாள்.

‘இப்பவே... எனக்கு டெஸ்ட் செய்யுங்க டாக்டர்... டாக்டரம்மா டாக்டர்கிட்ட சொல்லுங்கம்மா.”

டாக்டர் அசோகன்... தடுமாறினான். இவளுக்கு இவ்வளவு பெரிய எதிர் பாப்பு கொடுக்கலாகாது... எச்சரிக்கவும் வேண்டும்.

‘'நான் இருக்கணுமுன்னு. அவசியமில்லன்னு சொன்னால், இருக்கலான் னும் அர்த்தப்படுத்திக்கணும்... முதல் டெஸ்டில் இல்லாதது மாதிரி தெரியலாம். ஆனால் இரண்டாவது டெஸ்ட்டுலே இருக்கலாம். நீ கடைசியா எப்போ செக்ஸ் வச்சிக்கிட்டே? இதுல... வெக்கப்படுறதுக்கு ஒண்ணும் இல்லம்மா... இரண்டாவது டெஸ்டுக்கு இது முக்கியம்... சும்மா சொல்லும்மா...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/201&oldid=635643" இலிருந்து மீள்விக்கப்பட்டது