பக்கம்:பாலைப்புறா.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பாலைப்புறா

‘மனோகர்... நியூயார்க்கு புறப்படுறதுக்கு முந்திய ராத்திரி’ ‘இன்னையோட எத்தனைநாள் இருக்கும்?”

‘இருபது நாள்...’ ‘ஒருவேளை... அந்தக் கடைசி உறவுல அந்தக் கிருமிகள் ஒன்கிட்ட தாவியிருக்குமா என்பதை தெரிஞ்சிக்க... இன்னும் ஒரு மாதம் கழித்து ஒரு டெஸ்ட் செய்யணும். அதுலயும் இல்லன்னா... நானே மூன்றடி குதிப்பேன்...’ ‘என்ன டாக்டர்... என்னை பயமுறுத்துlங்க... தொட்டிலையும் ஆட்டிவிட்டு குழந்தையையும்...’

‘கிள்ளலம்மா... தாலாட்டுத்தான் பாடுறேன்... அது சந்தோஷமானதா துக்கமானதான்னு இப்போசொல்ல முடியாது. ஹோப் பார்தி பெஸ்ட் அன்ட் பிரிப்பர்ட் பார் தி ஒர்ஸ்ட். நல்லதே நடக்குமுன்னு நம்பு... அதே சமயம் கெட்டதை எதிர்கொள்ளவும் தயாராய் இரு’...

‘கலைக்கு மட்டும் அது இல்லன்னா...அய்யோ நினைக்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்குது... இவங்களுக்கு இல்லாட்டி, நான் திருப்பதில அங்கப் பிரதட்சணம் செய்வேன்’

டாக்டர் அசோகன், எதையோநினைவுபடுத்திக் கேட்டான். அது பேச்சை மாற்றுவது போலவும் இருந்தது.

“ஆமா... இன்றைக்கு நான் உங்க வீட்ல சாப்பிட்டிருக்கணுமே”... “நோ நோ... நாளைக்குத்தான் டாக்டர்’ ‘அப்போ இன்னிக்கும் புதன்கிழமை... நாளைக்கும் புதன் கிழமையா நாளை... நாளை என்னாதே... நண்பகல் உணவைப் பறிக்காதே’

கலைவாணி, எழுந்தே கேட்டாள். ‘இதையே நான் சொன்னதா நினையுங்க டாக்டர். இப்பவே என் ரத்தத்தை எடுங்க டாக்டர்’

அசோகனும் சந்திராவும், கலைவாணியை ஒரேசேரப் பார்த்தார்கள். அவளோ எங்கேயோ இருப்பது போல், அங்கே இருந்தாள். வாய், ஒரு பாட்டை முணுமுணுத்தது. வாடர்ப்பூ, அவளைக் கட்டியணைக்கிறாள். கனகம்மா, பாம்படத்தை ஆட்டிக்காட்டுகிறாள். அம்மா உச்சி மோர்கிறாள்... அப்பா, குனிந்த தலையை நிமிர்த்திக் கொள்கிறார்.

கலைவாணி. ஐம்பதுக்கு ஐம்பது என்று அசோகன் சொன்னதை எய்ட்ஸ் பரிட்சையில் பாஸ் மார்க் வாங்கிவிட்டதாகவே நினைத்தாள். முப்பத்தைந்தைவிட பதினைந்து மதிப்பெண்கள் அதிகம்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/202&oldid=635644" இலிருந்து மீள்விக்கப்பட்டது