பக்கம்:பாலைப்புறா.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203

கலைவாணி கண் விழித்தாள் என்பதைவிட, கண் திறந்தாள் என்று சொல்லலாம். மயக்கம் படிப்படியாய் தெளிந்தது போல், இமைகள் மெள்ள மெள்ள மேலேறின. கனவில்லாத தூக்கம். கல்லறைக்குள் முடங்கியது போன்ற மோனம். இடம், பொருள், எய்ட்ஸ் பரிணாமங்களைக் கடந்து, காலவெள்ளத்தில், கண்ணுக்குத் தெரியாத துளியாகவும், பிரபஞ்ச ஒளிச்சங்கமத்துளியில்துங்கிப் போன அனுபவம். மரணத்தின் வெள்ளோட் டமோ, மறு பிறப்பின் பின்னணியோ...

கலைவாணி சுற்றுமுற்றும் பார்த்தாள். தனித்ததோர் சிறிய அறை... பச்சைக் கட்டிலில் போட்ட வெள்ளைப்படுக்கை... பக்கத்திலேயே ஒரு நாற்காலி, எதிர் திசையில் கட்டிலில் இரும்பு விளிம்பில், தொங்கப் போட்ட ஒரு அட்டை... நான் என்பதைத் துறந்து, மனம் செத்து, ஆன்மா உயிர்த் தெழுந்தது போன்ற பூரணத்துவம், பொடிப் பொடியாகி, யதார்த்தத்தில் வெந்து, மனதுக்குள், எரிகொள்ளி நினைவுகள் மீண்டும் படையெடுத்தன. ஆனாலும், அந்த கொள்ளிகளிலும் ஒரு ஒளி, பேரொளி... அவளுக்கு, எய்ட்ஸ் கிருமிகள் உள்சாவகாசம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை... அவள் சராசரியானவள்.

கலைவாணி, நினைத்துப் பார்த்தாள்.

சுத்திகரிக்கப்பட்ட ஒரு பெரிய அறைக்குள், ஆப்பரேஷன் மேஜைக்குள் தான் படுக்க வைக்கப்பட்டிருந்ததும், பக்கத்தில் உள்ள ஒரு தூக்கலான இடத்தில் பல்வேறு வடிவுடைய குத்துக் கம்பிகளைப் பார்த்து பயந்து போனதும் நினைவுக்கு வந்தது. கைகளில் உறைகளோடும், முகங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/203&oldid=635645" இலிருந்து மீள்விக்கப்பட்டது