பக்கம்:பாலைப்புறா.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பாலைப்புறா

மூடிகளோடும் வந்த மூவரில் ஒருத்தர், தன்மூக்கில் எதையோ ஒன்றை வைக்க அவள் கண்களுக்கு எல்லாமே மாலை நேரமஞ்சள் வெளியிலாகி, கண்ணுக் குத் தெரிந்த கருக்கலாகி, பிறகு காரிருளாய் மறைந்து போனது நினைவுக்கு வந்தது... என்ன நடந்தது என்பதைப் பார்க்க முடியவில்லை... ஆனால்யூகிக்க முடிந்தது. அதை நினைக்க நினைக்க, இடுப்புக்குக் கீழே வலி எடுத்தது. பெற வேண்டிய வயிறுதுடித்தது. கருத்தரித்ததும், வயிற்றைத் தொட்டு தொட்டுப் பார்த்துக் கொண்டதும், அந்த துரோகியை அப்படி தொட விட்டதும் நினைவுக்கு வந்தன. அந்த சின்ன உயிருக்காக, அவள் மருவினாள். தாய்மையின் சின்னம், சின்னாபின்னமானதில்துடித்துப் போனாள். ஆயிரம் இருந்தாலும், அது அவள் பிள்ளை. ஆனால், அது கர்ணனைப் போல் கவச குண்டலங்களோடு தற்காப்பாய் பிறக்காமல், எய்ட்சின் தாக்குதலோடு பிறந்திருக்கக் கூடிய பிள்ளை... உலகில் சித்திரவதைக்கும், நரக வேதனைக் கும் உட்பட வேண்டிய ஜீவன்களில் ஒன்று குறைந்து விட்டது. தாயாக வருத்தப்பட்டாலும், சமூகத்திற்காக சந்தோஷப்பட வேண்டும்... ஆனாலும், இவளுக்கு அது இல்லையானால், அதுக்கு - அந்தக் குழந்தைக்கு எப்படி இருக்கும்? அவசரப்பட்டுட்டாளோ அசோகன் டாக்டரிடம் அப்படி பிடி வாதம் பிடித்திருக்கப்படாதோ... எப்படி முடியும்... எய்ட்ஸ் அல்லவென்று முழுமையாய் தெரிய இன்னும் இரண்டு மாசம்... அப்போது இவளுக்கு ஆறு மாதமாகும். ஒரு வேளை எய்ட்ஸ் இருந்தால்... ஆறு மாத பிள்ளையைக் கொல்வது அரைக் கொலைவாயிற்றே...

அரைமணி நேர உளைச்சலில், கலைவாணி குழந்தையை மறந்தாள்... படிப்படியாய் மறந்து, அசோகன் சொன்னதை ஆழமாக நினைத்தாள். அவளுக்கு அந்தக் கிருமிகள் இருக்கணுமுன்னு அவசியமில்லை... அசோகன் சொன்ன அந்த ஐம்பதுக்கு ஐம்பது, நூறாகியது. பாதிப் பாதி என்று சொன் னது, அவளுக்கு உடனடியாய் மனதில் தோன்றி, ஐம்பதையும் ஐம்பதையும் பெருக்கிக் காட்டியது... எய்ட்ஸ் மட்டும் இல்லை என்றால்... எதற்கு ஆனால்... இருக்காது. அந்த மனோகரும் முற்றிப் போன நோயாளி இல் லையே... எவ்வளவு வலுவானவன்... அந்த துரோகிக்கு... அது ஆரம்பக் கட்டம்...அவன் ரத்தத்திலேயே சரியாய் காலூன்றாத கிருமிகள், இவளிடம் எப்படி வரமுடியும். இப்போ தெரியாவிட்டாலும், பிறகு... இரண்டு மாதம் கழித்து தெரியலாம் என்றாரே... கடைசி உறவு கூட ஹெச்.ஐ.வி. கிருமிகளாய் கருத்தரிக்கலாம் என்றாரே... அந்தக் கடைசி உறவு, சரியாய் இருந்ததுபோல் தெரியலியே...பிரிவுத்துயரில் “லவ் பிளே கூட சோக விளையாட்டாய்தானே இருந்தது’

‘கன்கிராஜுலேசன்ஸ்... கலைம்மா... சமாய்ச்சுட்டே...’

எண்ணங்களில் மிதந்து, உடலறக் கிடந்த கலைவாணி, அசோகனையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/204&oldid=635646" இலிருந்து மீள்விக்கப்பட்டது