பக்கம்:பாலைப்புறா.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பாலைப்புறா

இதைவிட, மோசமான தண்ணி இல்லாக் காட்டுக்கு மாற்றுவாங்களாம்... நான் சொன்னேன் பாரு சிலுவை - அந்த ஆண்டவன் கட்டளை இல்லாட் டால் ஒனக்கோ... இவங்களுக்கோ... எதுக்கு தண்டனை வரணும்...??

கலைவாணியின் அவசரம்... அடங்கிப் போனது... நிதானத்திற்கு வழிவிட்டது. பாதி புரிந்து விட்டது ஒரு காரணம். இந்த ச் சூழலில் தன்னை முன்னிலைப்படுத்திக் கேட்பது அநாகரீகம். இல்லையென்றால் சொல்லி இருப்பார்கள். கலைவாணி, டாக்டர் சந்திராவையே பார்த்தாள். அந்த சலனமற்ற முகத்தில் ஊடகமாக பல சங்கடங்கள் ஒளிந்திருப்பதைக் கண்டாள். ஆறுதலாகப் பேசினாள்.

‘எனக்கு ரொம்ப வருத்தமாய் இருக்குது டாக்டிரய்யா... இந்த கவர்மெண்ட்ல, டிஸ்மிஸ் ஆக வேண்டியவங்களே... மெமோ கொடுக் காங்க... இந்த ஊரவிட்டு இவங்கள மாற்றுவாங்க என்கிறதை நெனைத்துக் கூட பார்க்க முடியல. நானும் அனாதையா போயிடுவேன்’

‘'கவலைப்படாதே கலை... இந்தம்மாவ மாற்றினாலும்... ஆர்டரை அமல் செய்ய முடியாது. ஏன்னா... இவங்களுக்கு பதிலாய் போடுற எந்த டாக்டரும் இங்கே வந்து இவங்களை ரீலீவ் செய்யமாட்டாங்க. அப்பேர்ப்பட்ட ஊரு அசல் சாக்கடை”

‘அப்போடாக்டர் முஸ்தபா...’

“பன்றி எங்கே இருக்கனுமோ...அங்கே இருக்குது’

‘அப்போ நான்...’

‘நீங்க சாக்கடையில் முளைத்த செந்தாமரை’

அசோகனும், சந்திராவும் சிரித்து விட்டார்கள். அப்பாடா இனிமேல் அந்த ஐம்பதுக்கு ஐம்பதைக் கேட்டிடலாம்;

‘அப்புறம்... என்னோட பிளட் டெஸ்ட் முடிவு எப்படி? எதுக்கும் என்னை தயார்படுத்திக்கிட்டேன். சும்மாச் சொல்லுங்க”

டாக்டர்சந்திரா, தலைகுனிந்தபடியே நின்றாள். பிறகு, வேகவேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள். வாசலுக்கு வெளியே சிறிது நேரம் நின்று கலைவாணியை குறுக்கும் நெடுக்குமாய் பார்த்துவிட்டு, பதறியடித்து வெளியே போனாள்.

டாக்டர்அசோகன், கரங்களை முதுகிற்குப்பின்னால் வளைத்து வைத்துக் கொண்டு, அங்குமிங்குமாய் சுற்றினான். பிறகு, அறையை விட்டு அவனும் வெளியேறப் போனான். கலைவாணிதான், அவனைப் பேச்சால் இழுத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/206&oldid=635648" இலிருந்து மீள்விக்கப்பட்டது